இந்தியாவின் பணக்கார முதல்வர் யார்? மு.க ஸ்டாலின் சொத்து எவ்வளவு?
இந்தியாவின் 27 மாநில முதல்வர்கள் மற்றும் 3 யூனியன் பிரதேச முதல்வர்களின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்
சொத்து விவரங்களைப் பொறுத்தவரை இந்திய அரசியல்வாதிகள் எப்போதுமே மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். “ஒரு தலைவர் பதவியில் வந்தால், ஏழு தலைமுறைக்குத் தேவையான வசதிகள் செய்து வைப்பார்கள்” என்றொரு பழமொழி போலவே மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்கான உண்மை எவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், தற்போது வெளிவந்த பட்டியல் 27 மாநில முதலமைச்சர்களும் 3 யூனியன் பிரதேசமும் முதலமைச்சர்களும் கொண்ட சொத்து விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சந்திரபாபு நாயுடு சொத்து மதிப்பு
இந்தியாவில் மிகப்பெரிய சொத்து வைத்திருக்கும் முதலமைச்சராக ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இருக்கிறார். 1992-ஆம் ஆண்டு துவங்கிய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனம் இன்று அவரது குடும்பத்தினர் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. மொத்த சொத்து மதிப்பு ரூ.931 கோடியைத் தாண்டியதால், அவர் இந்தியாவின் செல்வந்த முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சித்தராமையா சொத்து மதிப்பு
அடுத்த இடத்தில் அருணாசலப் பிரதேச முதலமைச்சர் பேமா கண்டு உள்ளார். அவரிடம் ரூ.332 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. மூன்றாவது இடத்தை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பிடித்துள்ளார். அவரிடம் ரூ.51 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. இவர்கள் இருவரும் சந்திரபாபு நாயுடுவை விட குறைவான சொத்துக்களையே வைத்திருந்தாலும், இந்திய அரசியலில் செல்வந்தர்களாகவே கருதப்படுகிறார்கள்.
மம்தா பானர்ஜி சொத்து
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மிகக் குறைந்த சொத்து வைத்திருப்பவராக பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவரிடம் ரூ.15.38 லட்சம் மட்டுமே உள்ளது. அடுத்ததாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா (ரூ.55.24 லட்சம்), கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் (ரூ.1.18 கோடி) ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் ஒப்பிடுகையில் பல மாநில முதலமைச்சர்கள் செல்வத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.
மு.க ஸ்டாலின் சொத்து விபரம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் 14வது இடத்தை பிடித்துள்ளார். 68 வயதான அவர், திமுக தலைவராகவும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாகவும் பணியாற்றி வருகிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.8 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி 38 கோடி சொத்து மதிப்புடன் இடம் பெற்றுள்ளார்.