காசி கும்பமேளா; தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில்; IRCTC-ன் மலிவு விலை டூர் பேக்கேஜ்!
திருநெல்வேலியில் இருந்து காசி கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில் பிப்ரவரி 5ல் இயக்கப்படுகிறது. இந்த யாத்திரை 8 நாட்கள் நடைபெறும், ₹26,850 முதல் கட்டணத்தில் தங்குமிடம், உணவு, போக்குவரத்து வசதிகள் அடங்கும்.
Mahakumbh 2025 Special Train
உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை கும்பமேளா நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் பங்கேற்கவும், புனித நீராடவும் லட்சக்கணக்கான மக்கள் காசிக்கு செல்ல ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு முழு வீச்சில் செய்து வருகிறது. அதே போல் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கழகம் பல சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. அதன்படி பிப்ரவரி 5 அன்று "மஹா கும்ப் சிறப்பு ரயிலை இயக்கப்பட உள்ளது. திருநெல்வேலியில் இருந்து வாரணாசி - பிரயாக்ராஜ் செல்லும் வகையில் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது.
Mahakumbh 2025 Special Train
இந்த ரயிலில் ஒரு 2 அடுக்கு ஏசி கோச், மூன்று 3 அடுக்கு ஏசி பெட்டிகள், 7 ஸ்லீப்பர் கோச்சுகள், ஒரு பேண்ட்ரி கார் மற்றும் இரண்டு பவர் கார்கள் இருக்கும். பிப்ரவரி 13 வரையிலான யாத்திரைக்கான தொகுப்புச் செலவு ₹26,850 (எகானமி கிளாக்), ₹38,470 (ஸ்டாண்டர்ட்) மற்றும் ₹ 47,900 (கம்ஃபோர்ட்). என நிர்ணயிகப்பட்டுள்ளது.
இந்த பேக்கேஜில் ஏசி/ ஏசி அல்லாத ஹோட்டல்/ தங்கும் வசதி ஆகியவற்றுக்கான கட்டணமும் அடங்கும். ஏசி அல்லாத சாலைப் பரிமாற்றங்கள், தென்னிந்திய சைவ உணவுகளும் வழங்கப்படும். மத்திய மற்றும் மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் விடுமுறை பயணச் சலுகையைப் பெறலாம்.
Mahakumbh 2025 Special Train
திருநெல்வேலியில் இருந்து பிப்ரவரி 5ம் தேதி அதிகாலை 1 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திரிபாதிரிபுலியூர், விழுப்புரம், சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த ரயில் நிலையங்களிலும் பயணிகள் ஏறிக்கொள்ளலாம். இந்த ரயில் பிப்ரவரி 7-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு காசி பனாரஸ் சென்று சேரும்.
Mahakumbh 2025 Special Train
அன்று மாலை கங்கா ஆரத்தி பார்த்துவிட்டு, மறுநாள் முழுவதும் பிராய்க்ராஜ் முழுவதும் சுற்றுலா செல்ல முடியும். பிப்ரவரி 9-ம் தேதி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கால பைரவர் உள்ளிட்ட கோயில்களை சுற்றி பார்க்கவும், பிப்ரவரி 10-ம் தேதி அயோத்தியா சரயு நதி, ராம் ஜென்ம பூமி கோயில் வழிபாடு செய்யலாம். பின்னர் அன்றைய தினம் இரவு திருநெல்வேலிக்கு இந்த ரயில் புறப்படும்.
Mahakumbh 2025 Special Train
இந்த ஆன்மீக சுற்றுலா ரயில் பிப்ரவரி 13-ம் தேதி காலை 7.30 திருநெல்வேலி வந்து சேரும். பயணிகள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ப ரயிலில் பயண வகுப்பு, தங்குமிடம், போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படும். இந்த சுற்றுலா ரயிலுக்கு முன்பதிவு செய்ய, 8287931977, 8287932122 என்ற செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.