MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இன்று முதல் குடிக்க முடியாது.. 2 நாட்களுக்கு மது விற்பனை முழு தடை.. எங்கு தெரியுமா?

இன்று முதல் குடிக்க முடியாது.. 2 நாட்களுக்கு மது விற்பனை முழு தடை.. எங்கு தெரியுமா?

மார்ச் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள பெரிய போராட்டங்களை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு மது விற்பனைக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது எங்கு, எதனால் என்பதை இங்கு பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 24 2026, 06:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மது விற்பனை தடை
Image Credit : Getty

மது விற்பனை தடை

கர்நாடகத்தின் பெங்களூரு அடுத்த நகரில் இரண்டு நாட்களுக்கு மதுபான விற்பனைக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரில் நடைபெறும் பெரும் அளவிலான போராட்டங்களை முன்னிட்டு, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய குறிக்கோள் ஆகும். நகரின் முக்கியமான போராட்ட இடமான ஃப்ரீடம் பார்க் பகுதியில் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பெரிய திரளான மக்கள் கூடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பெங்களூரு போராட்டம்
Image Credit : freepik

பெங்களூரு போராட்டம்

‘கர்நாடக மீசலாதி சம்ரக்ஷணா ஒக்கூடா’ மற்றும் ‘கர்நாடக ராஜ்ய பலகை ஜாதிகள ஒக்கூடா’ உள்ளிட்ட அமைப்புகள், ஜாதி பிரிவினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், மது அருந்திய நிலையில், சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் மார்ச் 25 இரவு 10 மணி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் மற்றும் குழப்பங்களைத் தவிர்க்க முடியாது என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

34
பெங்களூரு மது தடை
Image Credit : our own

பெங்களூரு மது தடை

மேற்குப் பிரிவில் உள்ள உப்பார்பேட்டை, சிட்டி மார்க்கெட், காட்டன்பேட்டை, கலாசிபாளையம், சாமராஜ்பேட்டை பகுதிகள், மத்தியப் பிரிவில் சேஷாத்திரிபுரம், ஹைகிரவுண்ட்ஸ் மற்றும் ஹலசூர்கேட் பகுதிகள் இந்தத் தடை வரம்பிற்குள் அடங்கி உள்ளன. இந்த இடங்களில் உள்ள அனைத்து மதுபான கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும் பப்களில் மது விற்பனை செய்ய அனுமதி இல்லை என்று தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது.

44
நகர கட்டுப்பாடுகள்
Image Credit : Asianet News

நகர கட்டுப்பாடுகள்

மேலும், மெஜஸ்டிக், கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போராட்டங்கள் அமைதியாக நடைபெறவும், பொதுமக்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் இருக்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெங்களூரு
இந்தியா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: 2027-ல் புதிய சம்பளம் வந்தால் நிலுவைத்தொகை எவ்வளவு? முழு கணக்கீடு இதோ
Recommended image2
PM Ujjwala Yojana Subsidy: அல்டிமேட் சந்தோஷ செய்தி.! கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image3
Central Government Employees Bonus 2026: அக்டோபரில் போனஸ் வருமா? ரூ.7,000-ல் இருந்து ரூ.21,000 ஆகுமா?
Related Stories
Recommended image1
குட்நியூஸ்.! ரூ.5000 வங்கி கணக்கில் போடும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Recommended image2
Now Playing
இந்தியா முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராகத் துடிப்பாகச் செயல்படக்கூடிய கூட்டணி - திருமாவளவன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved