- Home
- இந்தியா
- சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் அரசு ஊழியர்கள்.! இனி அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை- வெளியாகப்போகுது சூப்பர் அறிவிப்பு
சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் அரசு ஊழியர்கள்.! இனி அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை- வெளியாகப்போகுது சூப்பர் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாள் தொடர் விடுமுறை அளிக்கும் திட்டத்தை மீண்டும் பரிசீலித்து வருகிறது. அரசு ஊழியர்களின் பணி நேரம் மற்றும் விடுப்பு நாட்களில் மாற்றங்கள் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசும் அரசு ஊழியர்களும்
அரசு பல திட்டங்களை அறிவித்தாலும் அந்த திட்டங்கள் மக்களை சென்றடைய அரசு ஊழியர்களின் பணி முக்கியமானது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு, சம்பளம், நலன்கள், ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
வீட்டுக் கடன், மருத்துவ உதவி, ஓய்வூதியம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் எப்போதெல்லாம் அரசு விடுமுறை நாட்கள் வருகிறதோ அப்போதெல்லாம் விடுமுறையும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தான் அனைத்து வாரங்களிலும் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாள் தொடர் விடுமுறையானது அரசு ஊழியர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வாரத்தின் சனி, ஞாயிறும் விடுமுறை
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே அரசு ஊழியர்கள் பணியாற்றிடும் வகையில் கேரளாவில் இந்த நடைமுறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த விடுமுறை திட்டத்தை கடந்த 2014ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு 2 நாள் தொடர் விடுமுறை கொடுப்பதால் குறிப்பாக நீர் மின்சாரம் மற்றும் வாகன பயன்பாட்டின் செலவை குறைக்க வாய்ப்பு ஏற்படும் என கூறப்பட்டது.
ஆனால் மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படும் என்பதால் இந்த திட்டமானது கைவிடப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது கேரள முதலமைச்சராக உள்ள பிரனாயி விஜயன் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். இது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் பணி
இந்தக் கூட்டத்தில் வாரத்தில் 2 நாள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை அளிப்பது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது. இரண்டு நாள் தொடர் விடுமுறையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் நன்மைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்கு பெரும்பாலான நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
குறிப்பாக அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருப்பதால் அரசுகளுக்கு குஷியான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த விடுமுறையை ஈடு கட்டும் வகையில் தற்போது கேரளாவில் அரசு ஊழியர்களுகுக வழங்கப்பட்டு வரும் விடுப்புகளின் எண்ணிக்கையை 20இல் இருந்து 15 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் பணி நேரம் மாற்றம்
மேலும் மதிய உணவு இடைவேளையை 45 நிமிடங்கள் உள்ளதை 30 நிமிடங்களாகவும், காலையில் அலுவலக நேரத்தை முன்கூட்டியே தொடங்குவதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாலையில் கூடுதலாக 15 நிமிடங்கள் பணியாற்றும் வகையிலும் இந்த விடுமுறை திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை அளிப்பது தொடர்பான முடிவு அடுத்த மாதம் மத்தியில் முக்கிய கட்டத்தை எட்டும் என கூறப்படுகிறது.