எல்லா கேள்விக்கும் ஸ்மார்ட் வாட்ச்சில் பதில் தேடும் மாணவர்கள்; கடுப்பான தனியார் பள்ளி கூட்டமைப்பு
சமீப நாட்களாக பள்ளி மாணவர்கள் இடையே ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கர்நாடகா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
Online Class
பள்ளி மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை மட்டும் பார்த்து படித்துக் கொண்டிருந்த சூழலில் கொரோனா இடையூறு காரணமாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
Smart Phones
இதன் விளைவாக மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது அதிகரித்தது. படிப்பை கருதி பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் ஸ்மார்ட் போனை வழங்கினர். மேலும் சிலர் இதற்காகவே புதிய ஸ்மார்ட் போனை வழங்கினர்.
Smart Phone
இதன் தொடர்ச்சியாக பள்ளிகளிலும் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்தது. இதனை தவிர்க்க, மாணவர்கள் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போன் எடுத்து வரவோ, பயன்டுத்தவோ தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஸ்மார்ட்போன் செய்யும் அனைத்து வேலைகளையும் ஸ்மார்ட் வாட்ச் செய்கிறது.
Smart Watch
பள்ளிகளில் ஆசிரியர்கள் கேட்கும் கணிதம் தொடர்பான கேள்விகள், பிற கேள்விகளுக்கு மாணவர்கள் தங்கள் மூளையை பயன்படுத்தாமல் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி பதில் அளிக்கத் தொடங்கினர். இதன் விளைவாக பல பள்ளிகள் மாணவர்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதித்துள்ளன.
Smart Watch
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில், “பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது கட்டாயமாகி உள்ளது. ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துவதால் பள்ளி மாணவர்கள் அதில் பொழுதுபோக்கிற்காக வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவது, ஆபாச படங்களை பார்ப்பது என கவனச்சிதறல் ஏற்படுகிறது.
Smart Watch
இதனை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.