MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • போடுறா வெடிய.. கொத்தாக 10 நாட்கள் விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!

போடுறா வெடிய.. கொத்தாக 10 நாட்கள் விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!

School Holidays: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கணக்கெடுப்புப் பணிகளை முடிக்கும் நோக்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான தசரா விடுமுறை அக்டோபர் 18 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Oct 08 2025, 07:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தசரா விடுமுறை நீட்டிப்பு
Image Credit : x

தசரா விடுமுறை நீட்டிப்பு

மாநில அரசு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கணக்கெடுப்புப் பணிகளை முடிக்கும் நோக்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கான தசரா விடுமுறையை அக்டோபர் 18 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் சித்தராமையா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநில அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கம் முதல்வரைச் சந்தித்து, அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பள்ளிக்குச் சென்று பாடம் நடத்துவது ஆகிய இரண்டு பணிகளும் சுமையாக இருப்பதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவிடம் மனு அளித்து, ஏதாவது ஒரு பணிக்கு மட்டும் நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிறகு முதல்வர் பேட்டியளிக்கையில் கணக்கெடுப்புப் பணியில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால், தசரா விடுமுறையை மேலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கணக்கெடுப்பு பணி
Image Credit : GOOGLE

கணக்கெடுப்பு பணி

மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கணக்கெடுப்புப் பணி செப்டம்பர் 22 அன்று தொடங்கியது. இதை அக்டோபர் 7-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கணக்கெடுப்பின் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று முதலமைச்சர் கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கணக்கெடுப்பு முடியவில்லை. கொப்பல் போன்ற சில மாவட்டங்களில் 97% முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் வெறும் 60% மட்டுமே முடிந்துள்ளது. அக்டோபர் 7 கடைசி நாளாக இருந்தாலும், அனைத்து மாவட்டங்களிலும் முழுமையான கணக்கெடுப்பை முடிப்பது சாத்தியமில்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

35
ஆசிரியர்கள் கோரிக்கை
Image Credit : Asianet News

ஆசிரியர்கள் கோரிக்கை

கணக்கெடுப்புப் பணியில் மாநிலம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 40 ஆயிரம் இதர ஊழியர்கள் என மொத்தம் 1.60 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில், கணக்கெடுப்பை முடிக்கக் குறைந்தபட்சம் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு மனு அளித்திருந்தன. 

45
பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : Getty

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு, நிரந்தர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துடன் கலந்து பேசி, கல்வித்துறை மூலம் விடுமுறையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் அக்டோபர் 18 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும்.

55
இரண்டாம் ஆண்டு பியுசி தேர்வுப் பணி
Image Credit : our own

இரண்டாம் ஆண்டு பியுசி தேர்வுப் பணி

கணக்கெடுப்பு நடைபெறுவதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது இரண்டாம் ஆண்டு பியுசி இடைப்பருவத் தேர்வுகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்குக் கணக்கெடுப்புப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் தேர்வுப் பணிகளைத் தொடர்வார்கள். மற்ற ஆசிரியர்கள் விடுமுறை காலத்திலும் கணக்கெடுப்புப் பணியைச் செம்மையாக முடிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். இந்த முடிவால் கணக்கெடுப்புப் பணி வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிகள் விடுமுறை
விடுமுறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
வெறும் ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் ஃபார்ச்சூனர் கார் பரிசு... 6 வயது பேரனுக்காக பாட்டி அடித்த ஜாக்பாட்!
Recommended image2
DA Hike 2026: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு.! சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு விவரம்!
Recommended image3
Indian Railways: ரயில்களில் போன் சார்ஜ் போட தடை..? சார்ஜிங் போர்ட்களை அனைத்து வைக்க முடிவு..
Related Stories
Recommended image1
கொள்ளையடிக்க வந்த இடத்தில் ஆன்ட்டியை நைட்டியில் பார்த்ததும் அனைத்தையும் மறந்த திருடன்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Recommended image2
தமிழகத்தில் இன்று 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்காணு செக் பண்ணிக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved