- Home
- Tamil Nadu News
- கொள்ளையடிக்க வந்த இடத்தில் ஆன்ட்டியை நைட்டியில் பார்த்ததும் அனைத்தையும் மறந்த திருடன்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
கொள்ளையடிக்க வந்த இடத்தில் ஆன்ட்டியை நைட்டியில் பார்த்ததும் அனைத்தையும் மறந்த திருடன்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
கன்னியாகுமரியில், மீன்பிடிக்கச் சென்ற மீனவரின் மனைவி வீட்டில் தனியாக இருந்தபோது, கொள்ளையடிக்க நுழைந்த வாலிபர், பணம் இல்லாததால் அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் தப்பியோடியனார்.

கொள்ளையன்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் இரவு மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றிருந்தார். இதனால் மனைவி மட்டும் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது வாலிபர் வீட்டின் மேல்மாடி கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் தான் கொண்டு வந்த பொருட்களை வைத்து பீரோவை உடைத்தார். ஆனால் பீரோவில் பெரிய அளவில் நகை பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தார்.
கட்டிலில் மீனவரின் மனைவி
இதனையடுத்து வேறு ஏதாவது பொருட்கள் கிடைக்குமா என்று வீடு முழுவதும் தேடி பார்த்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த மற்றொரு அறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த அறையில் மீனவரின் மனைவி கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த வாலிபர் கொள்ளையடிக்க வந்ததை மறந்துவிட்டு பெண் மீது சபலம் கொண்டார். பின்னர் தான் கொண்டு வந்த கத்தரிக்கோலால் பெண்ணின் நைட்டியை வெட்டி எடுத்த அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் தாலி சங்கிலியை பறிக்க முயன்றார்.
கொள்ளையன் கைது
இதனை சற்றும் எதிர்பாராத பெண் கண் விழித்து பார்த்து திருடன் திருடன் என்று அலறி கூச்சலிட்டுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் அப்பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருந்த கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சில்மிஷம்
விசாரணையில் அவர் கீழமுட்டம் பகுதியை சேர்ந்த சகாயஜோஸ் (24) என்பது தெரிய வந்தது. இவர் பெண்ணின் வீட்டில் கொள்ளையடிக்க வந்த இடத்தில் சில்மிஷம் செய்ததை ஒத்துக்கொண்டார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் கூறும்போது: நான் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தேன். அத்துடன் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டேன். சம்பவத்தன்று பெண்ணின் வீட்டை நோட்ட மிட்ட போது வீட்டின் முன் ஆண்கள் அணியும் செருப்பு இல்லாததை கண்டேன். இதனால் வீட்டில் அவரது கணவர் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மாடி கதவின் பூட்டை கடப்பாறை கம்பியால் உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றேன் என்றார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சகாயஜோஸ் 8 திருட்டு வழக்குகளும், 2 போக்சோ வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.