ரயிலில் பொது டிக்கெட்டில் பயணிக்க இதுதான் முக்கியமான விதி! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
ரயிலில் முன்பதிவு செய்ய இயலாத பயணிகள், பொது டிக்கெட் வாங்கிப் பயணம் செய்கிறார்கள். ஜெனரல் டிக்கெட் வாங்கிவிட்டு எவ்வளவு நேரத்திற்குள் ரயிலைப் பிடிக்க வேண்டும் என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். ரயில்வே விதி இதுபற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
Train Ticket Rescheduling
ரயிலில் முன்பதிவு செய்ய இயலாத பயணிகள், பொது டிக்கெட் வாங்கிப் பயணம் செய்கிறார்கள். ஜெனரல் டிக்கெட் வாங்கிவிட்டு எவ்வளவு நேரத்திற்குள் ரயிலைப் பிடிக்க வேண்டும் என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். ரயில்வே விதி இதுபற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
Train Ticket Cancelling
இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். பயணங்களின் எண்ணிக்கையில் இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில் அமைப்பாகும். யாராவது நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தால், பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். ரயில் பயணம் செய்வதில் பல வசதிகள் உள்ளன. ஆனால், ரயிலில் பயணம் செய்வதற்கு பல விதிமுறைகளும் உள்ளன.
டிக்கெட்டுகள் தொடர்பாகவும் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் உள்ளன. இந்திய ரயில்வேயில் டிக்கெட் இல்லாமல் யாரும் பயணிக்க முடியாது. அவ்வாறு பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால்தான் முன்பதிவு செய்தும், பொது டிக்கெட் எடுத்தும் மக்கள் பயணம் செய்கின்றனர். ஜெனரல் டிக்கெட் வாங்கிவிட்டு எத்தனை மணிநேரம் ரயிலைப் பிடிக்கலாம் என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும்.
இந்திய ரயில்வே விதிகளின்படி, 199 கி.மீ. தூரம் வரைக்குமான பயணத்துக்கு, பொது டிக்கெட் வாங்கிய 3 மணி நேரத்திற்குள் ரயிலை பிடிக்கவேண்டியது அவசியம். அதேசமயம் பயணம் 200 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேல் இருந்தால், ஜெனரல் டிக்கெட்டை 3 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்.
199 கிலோமீட்டருக்கும் குறைவானது பயணத்துக்கு முன்பதிவு அல்லாத டிக்கெட் எடுத்துவிட்டு 3 மணி நேரத்திற்குள் பயணம் செய்யவில்லை என்றால், உங்கள் டிக்கெட் ரத்து செய்யப்படும். நீங்கள் அதை பயன்படுத்தி பயணம் செய்ய முடியாது. 3 மணிநேரம் கழித்து உங்கள் டிக்கெட் செல்லாது. முன்பு பலர் தாங்கள் எடுத்த பொது டிக்கெட்டை மற்றவர்களுக்கு விற்று வந்தனர். இதுபோன்ற மோசடிகளைக் கட்டுப்படுத்தவே ரயில்வே இந்த விதியை உருவாக்கியுள்ளது.
பயணிகள் முன்பதிவு இல்லாத பொது டிக்கெட்டுகளை ஆஃப்லைனில் ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் கவுன்டர்களில் மட்டுமே வாங்க கிடைக்கும். தற்போது ஆன்லைனிலும் பொது டிக்கெட் எடுக்கும் வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது. யுடிஎஸ் (UTS) செயலி மூலமாக ரயில் டிக்கெட் வாங்கலாம். ஆனால், அடுத்த 4 மணிநேரத்திற்குள் வரும் ரயில்களில்தான் இந்தச் செயலி மூலம் டிக்கெட் பெற முடியும்.
உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற நாளில் புக் செய்த டிக்கெட்டை மாற்றிக்கொள்ளவும் முடியும். இதனால் டிக்கெட் ரத்து செய்யவேண்டிய அவசியமின்றி டிக்கெட்டின் பயண நேரத்தை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது.