பயணிகளுக்கு இந்த சேவைகளை இலவசமாகவே வழங்கும் இந்திய ரயில்வே.. என்னென்ன தெரியுமா?
இந்திய ரயில்வே சில வசதிகளை இலவசமாக பயணிகளுக்கு வழங்குகிறது. எனவே ரயில் பயணிகள் ரயில்வேயில் எந்தெந்த வசதிகளை இலவசமாகப் பெறலாம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்..
Indian railway
இந்திய ரயில்வே சிறிய நகரங்களை நாட்டின் பெருநகரங்களுடன் இணைக்கிறது. மேலும் வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு போன்ற பல காரணங்களால் பலரும் ரயிலில் பயணிப்பதையே விரும்புகின்ற்னார். எனவே தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணிக்கின்றனர்.
இதன் காரணமாக, இந்திய இரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக உள்ளது. இந்திய இரயில்வே தனது பயணிகளுக்கு பல வகையான வசதிகளை இலவசமாக வழங்குகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
எனவே பயணிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு சலுகைகளை இந்திய ரயில்வே வழங்குகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஸ்லீப்பர் வகுப்பில் 6 இருக்கைகளை இந்திய ரயில்வே ஒதுக்கியுள்ளது. அதேசமயம் மூன்றாம் ஏசி பெட்டியில் 4 முதல் 5 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன
எனவே மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் கீழ் பெர்த் காலியாக இருந்தால், இந்திய ரயில்வே விதிகளின்படி, ஆன்போர்டு டிக்கெட் பரிசோதகரிட டம் கேட்டு இருக்கையை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்திய ரயில்வே சில வசதிகளை இலவசமாக பயணிகளுக்கு வழங்குகிறது. எனவே ரயில் பயணிகள் ரயில்வேயில் எந்தெந்த வசதிகளை இலவசமாகப் பெறலாம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்..
இலவச இணைய வசதி
இந்திய ரயில்வே பல நிலையங்களில் பயணிகளுக்கு இலவச Wi-Fi வசதியை வழங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், ரயில் தாமதமாகினாலோ அல்லது பயணிகள் முன்கூட்டியே புறப்பட்டாலோ, அவர்கள் நிலையத்தில் இலவச வைஃபை அனுபவிக்க முடியும்.
இலவச காப்பீடு
இந்திய ரயில்வே குறைந்த கட்டணத்தில் காப்பீட்டு வசதியை வழங்குகிறது. இந்திய ரயில்வே பயணிகளுக்கு காப்பீட்டு வசதியையும் வழங்குகிறது. இந்த காப்பீட்டுக்கு, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் 49 பைசா மட்டுமே செலுத்த வேண்டும்.
இலவச உணவு
சில சூழ்நிலைகளில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும்.. உங்கள் ரயில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும். எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணிகள் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும்.