MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் இருந்தாலும் ஈசியா கன்பார்ம் டிக்கெட் பெறலாம்; எப்படி தெரியுமா?

ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் இருந்தாலும் ஈசியா கன்பார்ம் டிக்கெட் பெறலாம்; எப்படி தெரியுமா?

இந்தியன் ரயில்வே வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை கன்பார்ம் செய்யும் விகல்ப் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் குறித்து பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
Published : Jan 07 2025, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Indian Railway

Indian Railway

இந்தியன் ரயில்வே விகல்ப் திட்டம் 

இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ரயில்களில் இப்போதெல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது. இதன் காரணமாக பல மாணவர்கள், முதியவர்கள் அல்லது வேறு யாரேனும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இன்று நான் உங்களுக்கு ரயில்வேயின் ஒரு திட்டத்தைப் பற்றி கூறுகிறேன். 

இதன் கீழ் நீங்கள் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்தால், உங்களுக்கு முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கும். அதாவது இந்தியன் ரயில்வே விகல்ப் (Vikalp) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது பயணிகளுக்கு இருக்கை அல்லது பெர்த் கிடைப்பதற்கு மாற்று ரயில் விருப்பங்களை வழங்குகிறது. நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது விகல்ப் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Train Ticket

Train Ticket

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் 

இந்த ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் புக் செய்த ரயிலில் டிக்கெட் இல்லை என்றால் அதே நாளில் நீங்கள் பயணிக்க வேண்டிய இடத்துக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் உறுதி செய்யப்படும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயிலில் உங்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். கடைசி நேரத்திலும் சார்ட் தயாரிக்கப்பட்ட பின்பும் இந்த வெயிட்டிங் லிஸ்ட் மாறவில்லை என்றால் உங்களால் அந்த ரயிலில் பயணிக்க முடியாது.

ஆனால் நீங்கள் விகல்ப் ஆப்ஷனை முன்கூட்டியே கிளிக் செய்து இருந்தால் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் அடுத்த ரயிலில் உங்களுக்கு இருக்கை வழங்கப்பட்டு நீங்கள் பயணிக்க முடியும். நீங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்த ரயில் புறப்படும் நேரத்திலிருந்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் இயக்கப்படும் ரயில்களில் நீங்கள் பயணிக்கலாம்.  இந்தத் திட்டத்தை அனைத்து ரயில்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

லாக்டவுன் இந்தியாவில் விதிக்கப்படுமா? HMPV வைரஸ் பாதிப்பு ; மத்திய அரசு அலெர்ட்

34
vikalp scheme

vikalp scheme

கூடுதல் கட்டணம் உண்டா? 

ஆனால் அடுத்து புறப்படும் ரயில்களில் காலியாக இருக்கும் இடத்தை பொறுத்தே உங்களுக்கு இருக்கை வழங்கப்படும். உங்களுக்கு மற்றொரு ரயிலில் இருக்கை ஒதுக்கும்போது கூடுதலாக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. அதே வேளையில் நீங்கள் ஏற்கெனவே சூப்பர் பாஸ்ட் ரயிலில் புக் செய்து விட்டு, விகல்ப் திட்டத்தின் மூலம் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மாற்றம் செய்யப்பட்டால் வித்தியாச கட்டணம் திருப்பி வழங்கப்பட மாட்டாது.

44
What is the vikalp scheme?

What is the vikalp scheme?

டிக்கெட் முன்பதிவின்போது விகல்ப் திட்டத்தை எப்படி செலக்ட் செய்வது? 

1. உங்கள் பெயர், பாஸ்வேர்டு கொடுத்து IRCTC இணையதளத்தை ஓப்பன் செய்யவும். 

2. பின்பு பயணத் தேதி, சேருமிடம், பயண வகுப்பு மற்றும் இருக்கை இருப்பு ஆகியவற்றை உள்ளிடவும்.

3. உங்களின் பெயர் அல்லது பயணம் செய்பவரின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை உள்ளிடவும்.

4, டிக்கெட் முன்பதிவை உறுதிப்படுத்த பணம் செலுத்தவும்.

5. இப்போது திரையில் காட்டப்படும் Vikalp Scheme விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

6, மாற்று ரயில்களின் பட்டியல் திரையில் காட்டப்படும். அதே வழித்தடத்திற்கு மாற்று ரயில்களை தேர்வு செய்யலாம்.

இனி பர்சனல் லோன் வாங்குவது கஷ்டம்; சாமானிய மக்களின் அடிமடியில் கைவைத்த ஆர்பிஐ; முழு விவரம்!
 

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
இந்தியா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas Cylinder : கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை என்ன? முழு விவரம்!
Recommended image2
8th Pay Commission Pension Calculator: 8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் டபுள் ஆகுமா? 25, 50, 75 ஆயிரம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved