- Home
- இந்தியா
- Indian Railways: ரயில் டிக்கெட் Screenshot, PDF இனி செல்லாதா? உண்மை என்ன? ரயில்வேயின் புதிய விளக்கம்
Indian Railways: ரயில் டிக்கெட் Screenshot, PDF இனி செல்லாதா? உண்மை என்ன? ரயில்வேயின் புதிய விளக்கம்
ரயில் டிக்கெட்டின் Screenshot, PDF இனி செல்லாது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உண்மையில் இந்திய ரயில்வே என்ன சொல்கிறது? பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம் இதோ!

இந்தியன் ரயில்வே
ரயிலில் பயணம் செய்யும்போது மொபைலில் சேமித்து வைத்துள்ள டிக்கெட் Screenshot அல்லது PDF இனி செல்லாது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல பயணிகள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால் உண்மையில் இந்திய ரயில்வே என்ன கூறியுள்ளது? புதிய விதி என்ன? யார் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்வோம்.
Screenshot, PDF தடை எனும் தகவல்... உண்மையா?
சமூக வலைதளங்களில் பரவும் தகவலின்படி, இனிமேல் ரயில் டிக்கெட்டின் Screenshot அல்லது PDF காட்டினால் அது ஏற்கப்படாது என்றும், அதிகாரப்பூர்வ செயலியில் மட்டுமே டிக்கெட்டை காட்ட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இதுபோன்ற தகவலுக்கு இந்திய ரயில்வே இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மாறாக, முந்தைய வழிகாட்டுதல்களின்படி மின்னணு (e-Ticket) டிக்கெட்டை மொபைலில் காட்டுவது செல்லுபடியாகும். சில சூழல்களில் SMS, PDF அல்லது Screenshot மூலமாகவும் டிக்கெட் விவரங்களை சரிபார்க்க முடியும்.
பயணிகள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை
டிக்கெட் மட்டும் இருந்தால் போதாது. TTE கேட்கும் போது கீழ்கண்டவற்றையும் வைத்திருக்க வேண்டும்.
• ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை.
• PNR எண் தெளிவாக தெரியும் வகையில் டிக்கெட்.
• மொபைல் பேட்டரி காலியாகிவிடும் சூழலை தவிர்க்க, டிக்கெட்டை Offline-ஆக சேமித்து வைத்திருப்பது நல்லது.
அடையாள அட்டையை காட்ட முடியாவிட்டால், செல்லுபடியாகும் e-Ticket இருந்தாலும் சிக்கல் ஏற்படலாம்.
RailOne செயலி வந்த பிறகு என்ன மாறியது?
இந்திய ரயில்வே தற்போது RailOne என்ற ஒருங்கிணைந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் டிக்கெட் முன்பதிவு, PNR நிலை, நேரடி ரயில் கண்காணிப்பு உள்ளிட்ட பல சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. ஆனால் இதனால் Screenshot அல்லது PDF முற்றிலும் செல்லாது என்ற புதிய விதி அறிவிக்கப்பட்டதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்
சமூக வலைதளங்களில் பரவும் ஒவ்வொரு தகவலையும் நம்பாமல், IRCTC அல்லது இந்திய ரயில்வே வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புவது பாதுகாப்பானது. தற்போது "Screenshot, PDF இனி செல்லாது" என்ற தகவலுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. எனவே பயணிகள் தேவையற்ற பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை.

