MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • சென்னை டூ பெங்களூரு அரை மணி நேரத்தில் போகலாம்! 1,100 கிமீ ஸ்பீடு! ஹைப்பர்லூப் ரயில்!

சென்னை டூ பெங்களூரு அரை மணி நேரத்தில் போகலாம்! 1,100 கிமீ ஸ்பீடு! ஹைப்பர்லூப் ரயில்!

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் டிராக் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது.  ஹைப்பர்லூப் ரயில் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு அரை மணி நேரத்தில் சென்றடைய முடியும்.

2 Min read
Author : Rayar A
Published : Feb 25 2025, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சென்னை டூ பெங்களூரு அரை மணி நேரத்தில் போகலாம்! 1100 கிமீ ஸ்பீடு! ஹைப்பர்லூப் ரயில்!

சென்னை டூ பெங்களூரு அரை மணி நேரத்தில் போகலாம்! 1100 கிமீ ஸ்பீடு! ஹைப்பர்லூப் ரயில்!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக இருக்கிறது. தொலைதூரம் பயணிக்க வசதியாகவும், கட்டணம் குறைவாகவும் இருப்பதால்  தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் சாதாரண ரயில்கள் மட்டுமின்றி வந்தே பாரத், தேஜாஸ், சதாப்தி உள்பட அதிவிரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

அதிவேகமாக செல்லும் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயின் அடையாளமாக மாறியுள்ளது. இந்நிலையில், வந்தே பாரத், புல்லட் ரயில்களை விட அதிவேகமாக செல்லக்கடிய ஹைப்பர்லூப் ரயில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பய்ட உள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஹைப்பர்லூப் ரயில்

ஹைப்பர்லூப் ரயில்

நாட்டின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை இப்போது முழுமையாக தயாராக இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமையுடன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் சோதனைப் பாதை 410 மீட்டர் நீளம் கொண்டது. ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு இந்திய ரயில்வேயிடமிருந்து நிதி உதவி கிடைத்துள்ளது.

ரயில்வே துறை மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் இணைந்து இந்தப் பாதையை உருவாக்கியுள்ளனர். சென்னை ஐஐடி குழு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனமான TuTr ஹைப்பர்லூப் ஆகியவை இணைந்து நாட்டின் அதிவேக ரயில் பாதையை உருவாக்க உள்ளனர். 

தமிழ்நாடு, கேரளா மக்களின் கவனத்துக்கு..! இந்த 2 ரயில் நிலையங்களின் பெயர் மாற்றம்!

34
ஹைப்பர்லூப் என்றால் என்ன?

ஹைப்பர்லூப் என்றால் என்ன?

ஹைப்பர்லூப் என்றால் என்ன?

ஹைப்பர்லூப் என்பது ஒரு எதிர்கால தொழில்நுட்பமாகும். இதில் ஒரு ரயில் ஒரு சிறப்பு வெற்றிடக் குழாயின் உள்ளே அதிவேகத்தில் பயணிக்கிறது. இந்த தொழில்நுட்பம் பயணிகளுக்கு வேகமான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை உறுதியளிக்கிறது. இந்த ஹைப்பர்லூப் அமைப்பில், ரயில்கள் மணிக்கு 1,100 கிமீ என மின்னல் வேகத்தில் இயங்கும். புல்லட் ரயில்களின் வேகம் மணிக்கு 450 கிமீ ஆக இருக்கும் நிலையில், ந்த ஹைப்பர்லூப் ரயில்கள் அதைவிட வேகமாகும்.

44
சென்னை டூ பெங்களூரு

சென்னை டூ பெங்களூரு

இந்த தொழில்நுட்பத்தின் மூலம், பயணிகள் தங்கள் பயணத்தை வெறும் 30 நிமிடங்களில் முடிக்க முடியும். அதாவது இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டால், சென்னை டூ பெங்களூரு மற்றும் சென்னை டூ திருச்சிக்கு வெறும் 30 நிமிடங்கள் அதாவது அரை மணி நேரத்தில் செல்ல முடியும். ஹைப்பர்லூப் பாதையின் பாதை ஓட்டம் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது. சோதனைகள் வெற்றியடைந்தால், இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் இந்தியாவில் பெரிய அளவில் செயல்படுத்தப்படலாம்.

இந்தியாவில் ஹைப்பர்லூப் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், ரயில்வே மற்றும் சாலைப் பயணத்தின் முழு அமைப்பும் ஒரு பெரிய மாற்றத்தைக் காணும். இந்த தொழில்நுட்பம் வேகமானது மட்டுமல்ல, அதிக ஆற்றல் திறன் கொண்டது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எதிர்காலத்தில், ஹைப்பர்லூப் இந்திய பயணிகளுக்கு வேகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தின் கனவை யதார்த்தமாக மாற்றக்கூடும்.

Bengaluru Weather: பெங்களூருவாசிகளே! வெயில் கொளுத்தப்போகுது ! வெளியே போயிடாதீங்க!

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission Pension Calculator: 8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் டபுள் ஆகுமா? 25, 50, 75 ஆயிரம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image2
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image3
IndiGo: ஒரு பயணிக்கு ரூ.590 கூடுதல் வருமானம்! இத்தனை நாள் இதுதெரியாம போச்சே
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved