- Home
- இந்தியா
- என் புருஷன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நம்ம சந்தோஷமா இருக்க முடியாது! காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்!
என் புருஷன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நம்ம சந்தோஷமா இருக்க முடியாது! காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்!
அனந்தபுரத்தில் கணவன் சுரேஷ் பாபுவை, மனைவி அனிதா தனது கள்ளக்காதலன் பாபாவலியுடன் சேர்ந்து கொலை செய்தார். கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால், அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கள்ளக்காதல் விவகாரம்
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் சதாசிவ காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (43). இவர் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிதா. அதே பகுதியில் பாபாவலி என்பவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்துவந்தார். இவருக்கும் அனிதாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்தது மட்டுமல்லாமல் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.
தினமும் மது குடித்துவிட்டு தகராறு
நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்தது மட்டுமல்லாமல் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் அனிதா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கணவன் ஹோட்டலுக்கு சென்றதும் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். எவ்வளவு சொல்லியும் மனைவி கேட்காததால் கணவர் சுரேஷ்பாபு தினமும் மது குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் கணவன்-மனைவி இடையே தகராறு அதிகரித்தது.
கணவர் கொலை
கணவரை தீர்த்து கட்டினால் மட்டுமே நாம் ஒன்றாக இருக்க முடியும் என்பதால் அவரை கொலை செய்ய மனைவி மற்றும் கள்ளக்காதலன் முடிவு செய்தார். அதன்படி ஹோட்டலை மூடி விட்டு ஃபுல் மப்பில் தள்ளாடியடி வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது மனைவியின் கள்ளக்காதலன் பாபாவலி சுரேஷ்பாபு மீது காலி மது பாட்டில்களை வீசி எறிந்தார். இதில் நிலைதடுமாறிய சுரேஷ்பாபு தடுமாறி சாலையில் விழுந்தார். இதனையடுத்து 'ஸ்குரூ டிரைவரால்' சரமாரியாக குத்தி பெரிய பாறாங்கல்லை தூக்கி தலையில் போட்டதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மனைவி கைது
சந்தேகத்தின் பேரில் பாபாவலியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில், அனிதாவுடன் சேர்ந்து சுரேஷ்பாபுவை தீர்த்துக்கட்டியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்காக தாலி கட்டிய மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.