கவுண்ட்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் கேன்சல் செய்வது எப்படி? முழு விவரம்!
ரயில் நிலையங்களின் கவுண்ட்டரில் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை இப்போது ஆன்லைனில் கேன்சல் செய்யலாம். இது குறித்து பார்ப்போம்.

கவுண்ட்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் கேன்சல் செய்வது எப்படி? முழு விவரம்!
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ரயிலில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிமாக உள்ளது. பண்டிகை காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது.இதனால் ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பயணிகளின் வசதிக்கு முன்னுரிமை அளிக்க இந்திய ரயில்வே தொடர்ந்து அதன் சேவைகளை மேம்படுத்தி வருகிறது. பயணத்தை எளிதாக்க, டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவு கணிசமாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, பெரும்பாலான ரயில் பயணிகள் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ டிக்கெட் தளமான ஐ.ஆர்.சி.டி.சி மூலம் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள்.

ரயில் டிக்கெட்
ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்றால், நீங்கள் அதை எளிதாகச் செய்து பணத்தைத் திரும்பப் பெறலாம். ஆனால் இப்போது ரயில் நிலையங்களின் டிக்கெட் கவுண்ட்டர்களில் நேரடியாக எடுக்கப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் ரத்து செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை கவுண்ட்டர்களில் மட்டுமே கேன்சல் செய்யும் நிலை இருந்த நிலையில், இப்போது அந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் கேன்சல் செய்து கொள்ளலாம்.
கவுண்ட்டர் டிக்கெட்
கவுண்ட்டர் டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
* முதலில் ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்துக்கு சென்று 'டிக்கெட்டை ரத்துசெய்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய்யுங்கள்.
* இதை க்ளிக் செய்தவுடன் கவுண்டர் டிக்கெட்டை ரத்து செய்வதற்கான தேர்வை நீங்கள் காண்பீர்கள்.
* இப்போது உங்கள் கவுண்ட்டர் டிக்கெட்டில் இருந்து PNR எண் மற்றும் ரயில் எண்ணை பாதுகாப்பு கேப்ட்சாவுடன் உள்ளிட வேண்டும்.
* அடுத்து உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். உங்கள் டிக்கெட்டை ரத்து செய்வதைத் தொடர இந்த OTP ஐ உள்ளிடவும்.
* பின்னர் உங்கள் திரையில் ஒரு உரையாடல் பெட்டியைக் (dialog box) காண்பீர்கள். அதில் பயணிகளின் விவரங்கள் தோன்றும். பின்பு தோன்றும் சமர்ப்பி (submit) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தவுடன் உங்கள் கவுண்ட்டர் டிக்கெட் வெற்றிகரமாக ரத்து செய்யப்படும்.
டிக்கெட் ரீபண்ட்
டிக்கெட் ரீபண்ட் எப்படி பெறுவது?
இதில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால் நீங்கள் கவுண்ட்டரில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைனில் கேன்சல் செய்தாலும், ஆன்லைன் வழியாக ரீபண்ட் பெற முடியாது. உங்களுக்கு டிக்கெட் கேன்சல் செய்த பணம் கிடைக்க வேண்டும் என்றால் அருகில் உள்ள ரயில் நிலையங்களின் கவுண்ட்டருக்கு தான் செல்ல வேண்டும். அங்கு நீங்கள் ஆன்லைனில் டிக்கெட்டை கேன்சல் செய்ததற்கான ஆதாரங்களை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் காண்பித்தால், டிக்கெட் ரீபண்ட் கிடைக்கும்.
'வந்தே பாரத்' பயணிகளுக்கு இனி கவலையில்லை; ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!