MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • அடேங்கப்பா! பிரதமர், ஆளுநர்களுக்கு இவ்வளவு சம்பளமா?; அதிக சம்பளம் வாங்கும் முதலமைச்சர் இவர்தான்!

அடேங்கப்பா! பிரதமர், ஆளுநர்களுக்கு இவ்வளவு சம்பளமா?; அதிக சம்பளம் வாங்கும் முதலமைச்சர் இவர்தான்!

இந்தியாவில் பிரதமர், ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Rayar r
Published : Jan 09 2025, 02:37 PM IST| Updated : Jan 09 2025, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Prime Minister and , Governor

Prime Minister and , Governor

இந்தியாவில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மாத சம்பளம் பெறுகின்றனர். தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும் அந்தந்த நிறுவனங்கள் சம்பளம் வழங்கி வருகின்றன. இதேபோல் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருவது உங்களுக்கு தெரியுமா? இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

குடியரசுத் தலைவர்

இந்திய அரசின் தலைவராகவும், நாட்டின் முதல் குடிமகனாகவும் உள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது தவிர குடியரசுத் தலைவருக்கு இலவச வீடு, 
இலவச மருத்துவ சிகிச்சைகளும், வாகன வசதியும் உண்டு. 

துணை குடியரசுத் தலைவர் 

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கருக்கு மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தவிர அவருக்கு வாகன வசதி, வீடு, மருத்துவ வசதிகள் ஆகியவையும் உள்ளது. 

24
PM Narendra Modi

PM Narendra Modi

பிரதருக்கு எவ்வளவு சம்பளம்?

இந்திய பிரதமர் மோடிக்கு தோராயமாக மாதம் ரூ.2,80,000 அடிப்படை சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. 

மாநில ஆளுநர்கள் 

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட அனைத்து மாநிலங்களின் ஆளுநர்களுக்கு மாதம்தோறும் ரூ.3.50 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. இது பிரதமரை விட அதிகம் ஆகும். 

மாநில முதல்வர்களின் சம்பளம்?

இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் முதல்வராக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளார். அவருக்கு மாதம் ரூ.4,10,000 சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மாதம் ரூ.3,90,000 சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாதம் ரூ.3,65,000 சம்பளம் பெறுகிறார். ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அலவன்ஸுடன் சேர்த்து ரூ.3,35,000 மாத சம்பளமாக பெற்று வருகிறார்.

Tirupati Stampede: திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி; நடந்தது என்ன?; யார் மீது தவறு?

34
Tamilnadu CM MK Stalin

Tamilnadu CM MK Stalin

மு.க.ஸ்டாலின் சம்பளம் என்ன?

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாதம்தோறும் ரூ.2.05,000 சம்பளம் வாங்கி வருகிறார். அண்டை மாநிலங்களை பொறுத்தவரை கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ.1,85,000மும், கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.2,00,000மும் சம்பளம் பெற்று வருகின்றனர். நாட்டிலேயே குறைவான சம்பளம் வாங்கும் முதல்வராக திரிபுரா முதல்வர் மாணிக் சகா உள்ளார். அவருக்கு மாதம் ரூ.1,05,000 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

44
DMK MP kanimozi

DMK MP kanimozi

எம்.பி.க்களின் சம்பளம்

இந்திய எம்.பி.க்களுக்கு மாதம்தோறும் ரூ.1 லட்சம் சம்பளம் அளிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் உயரும். இது தவிர அவர்களுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ள பயணப்படி, ரயில்களில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உண்டு.

தலைமை நீதிபதி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 

இந்திய தலைமை நீதிபதியின் மாத சம்பளம் ரூ.2.80 லட்சமாகும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.2.50 லட்சம் ஆகும். ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பொறுத்தவரை அவர்கள் வகிக்கும் பதவிகள் மற்றும் நிலையைப் பொறுத்து ரூ.50,000 முதல் ரூ.2,50,000 வரை சம்பளம் கிடைக்கும்.

மகா கும்பமேளா 2025 : எப்போது தொடங்குகிறது? வரலாற்று, கலாச்சார முக்கியத்துவம் என்ன?

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சம்பளம்
இந்தியா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved