MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Tirupati Stampede: திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி; நடந்தது என்ன?; யார் மீது தவறு?

Tirupati Stampede: திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி; நடந்தது என்ன?; யார் மீது தவறு?

திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். என்ன நடந்தது? இந்த சம்பவத்தில் யார் மீது தவறு? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Rayar r
Published : Jan 09 2025, 01:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tirupati Stampede

Tirupati Stampede

கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் உலகப்புகழ் பெற்றதாகும். இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். முக்கிய நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சுவாமி ஏழுமலையானை தரிசிக்க 2 மூன்று நாட்கள் கூட ஆகும்.

இந்நிலையில் பல்வேறு சிறப்புகளை பெற்ற திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைகுண்ட ஏகாதசி நாளை முன்னிட்டு திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனத்துக்காக சீனிவாசம், விஷ்ணு நிவாசம், சத்தியநாராயணபுரம் பைராகிப்பட்டேடா ராமாநாயுடு பள்ளிகூடம் உள்ளிட்ட 8 இடங்களில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

24
Tirupati stampede Deaths

Tirupati stampede Deaths

நடந்தது என்ன?

இந்த டிக்கெட்டுகளை வாங்க ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்து சென்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள். மேலும் 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் 6 பேர் பலியானதற்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது சிறப்பு தரிசனம் டோக்கன் வழங்கும் போது, ​​பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். எதிர்பார்த்ததை விட பக்தர்கள் கூட்டம் கூடியுள்ளது. திருப்பதி திருமலை தேவஸ்தானமும், போலீசாரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்தவில்லை. டிக்கெட் வழங்கும் இடங்களில் பக்தர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரித்து டிக்கெட் வழங்குவதற்கு பதிலாக ஒரே நேரத்தில் மொத்தமாக வழங்கியுள்ளனர்.

டிக்கெட் வழங்கும் இடங்களில் கேட் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளதால் ஒரே நேரத்தில் பக்தர்க்ள் முண்டியடித்து சென்றபோது நெரிசல் ஏற்படுள்ளது.

மகா கும்பமேளா 2025 : எப்போது தொடங்குகிறது? வரலாற்று, கலாச்சார முக்கியத்துவம் என்ன?

34
What happened in Tirupati

What happened in Tirupati

யார் மீது தவறு?

கூட்ட நெரிசலில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் மற்றும் வயதானவர்கள் தான். கூட்ட நெரிசலில் பக்தர்கள் காயமடைந்த நிலையில், சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழுந்தனர். போலீசாரும், சக பக்தர்களும் சிபிஆர் செய்து அவர்களை காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகளும், போலீசாரும் டிக்கெட் வழங்கிய இடங்களில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக பிரித்து இருந்தால் கூட நெரிசல் ஏற்பட்டு இருக்காது. 

பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என போலீசர் முன்கூட்டியே திட்டமிடாதது விபதுக்கு காரணமாகும். மொத்தத்தில் மாநில போலீசார் மற்றும்  கோயில் அதிகாரிகளின் நிர்வாக குறைபாடுகளே 6 பக்தர்கள் உயிரிழக்க காரணமாகி விட்டது என தகவல்கள் கூறுகின்றன. திருப்பதி கூட்ட நெரிசல் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

சம்பவம் நடந்தவுடன் அங்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவில்லை என்றும் வந்திருந்தால் உயிழப்புகளை குறைத்து இருக்கலாம் எனவும் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

44
Tirupati Elumalaiyan Temple

Tirupati Elumalaiyan Temple

தேவஸ்தானம் சொல்வது என்ன?

கூட்ட நெரிசல் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் கூறுகையில், ''டிக்கெட் வழங்கும் இடங்களில் கேட்டை அகற்றும்போது டிஎஸ்பியும், போலீசாரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்யாததே கூட்ட நெரிசலுக்கு காரணமாகும். ஆனாலும் விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே கூட்ட நெரிசலுக்கான காரணம் தெரியவரும். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. காயம் அடைந்தவர்கள் இரண்டு மூன்று நாட்களில் குணமடைந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்'' என்று தெரிவித்தார்.

IPPB வாடிக்கையாளர்களை குறிவைக்கும் புதிய பான் கார்டு மோசடி! PIB எச்சரிக்கை!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திருப்பதி
இந்தியா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved