அட! ரயில் பெட்டி எண்களில் இவ்வளவு ரகசியம் மறைந்திருக்கிறதா? முழு விவரம்!
நாம் பயணிக்கும் ரயில்களில் ஒவ்வொரு வகுப்பு பெட்டிகளுக்கும் ஒவ்வொரு எண்கள் உண்டு. இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

அட! ரயில் பெட்டிகளின் எண்களின் இவ்வளவு ரகசியம் மறைந்திருக்கிறதா? முழு விவரம்!
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ரயிலில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிமாக உள்ளது. பண்டிகை காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்புதான்.
நீண்ட தூரம் களைப்பின்றி வசதியாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இந்தியாவில் இயக்கப்படும் ஒவ்வொரு ரயிலுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இதேபோல் நீங்கள் பயணிக்கும் ஒவ்வொரு பெட்டிக்கும் 5 இலக்க எண்கள் வழங்கப்பட்டு இருக்கும். ரயில் பெட்டியில் உள்ள 5 இலக்க எண்ணின் அர்த்தத்தைப் பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
ரயில் பெட்டிகளின் எண்கள்
ரயில் பெட்டிக்கு வெளியே எழுதப்பட்ட முதல் இரண்டு இலக்கங்கள் ரயில் தயாரிக்கப்பட்ட ஆண்டைக் குறிக்கின்றன. இது 08437 போல எழுதப்பட்டிருந்தால், அது ரயிலின் உற்பத்தி ஆண்டைக் குறிக்கிறது. 08 என்ற எண், அந்த ரயில் 2008 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. 5 இலக்கங்களில் முதல் இரண்டு இலக்கங்கள் குறிப்பிட்ட ரயிலின் உற்பத்தி ஆண்டைக் குறிக்கின்றன. கடைசி மூன்று இலக்கங்கள் அந்த பெட்டி எந்த வகுப்பை சேர்ந்தது? என்பதை குறிக்கிறது.
உலகின் நீளமான ரயில்வே நெட்வொர்க்குகள்! இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
ரயில் பெட்டி எண்களின் ரகசியம்
ரயில் பெட்டிகளில் குறிக்கப்பட்டுள்ள கடைசி மூன்று இலக்கங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஏனெனில் அது நீங்கள் பயணிக்கும் பெர்த்தின் வகையைக் குறிக்கிறது. கடைசி மூன்று இலக்கங்கள் பெட்டி ஏசி வகுப்பா? அல்லது ஸ்லீப்பர் வகுப்பா? என்பதைக் கூறுகின்றன. அந்தந்த எண் அமைப்பை பொறுத்து பெட்டிகளின் வகைகள் மாறுபடும்.
அதாவது ரயில் பெட்டிகளில் கொடுக்கப்பட்டுள்ள கடைசி மூன்று இலக்க எண் 001 முதல் 025 வரை முடியும் எண்கள் எது ஏசி முதல் வகுப்பு பெட்டி என்பதை குறிக்கிறது. 026 முதல் 050 வரை முடியும் எண்கள் கூட்டு 1 ஏசி + ஏசி-2Tபெட்டி என்பதை குறிக்கிறது. 051 முதல் 100 வரை முடியும் எண்கள் ஏசி-2Tபெட்டி என்பதை குறிக்கிறது. 101 முதல் 150 வரையிலான எண்கள் ஏசி-3Tபெட்டி என்பதை குறிப்பிடுகிறது.
ஸ்லீபபர் பெட்டி எண்கள்
இதேபோல் 151 முதல் 200 வரையில் முடியும் என்கள் சிசி (ஏசி சேர் கார்) பெட்டியை சேர்ந்தது என்பதையும், 201 முதல் 400 வரை முடியும் எண்கள் எஸ்எல் (இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர்) பெட்டியை சேர்ந்தது என்பதையும், 401 முதல் 600 வரை முடியும் எண்கள் ஜிஎஸ் (பொது 2 ஆம் வகுப்பு) பெட்டியை சேர்ந்தது என்பதையும் குறிக்கின்றன.
இது மட்டுமின்றி 601 முதல் 700 வரை முடியும் எண்கள் 2 எஸ் (இரண்டாம் வகுப்பு உட்கார்ந்திருத்தல்/ஜன சதாப்தி நாற்காலி வகுப்பு) பெட்டியை சேர்ந்தது என்பதையும், 701 முதல் 800 வரை முடியும் எண்கள் அது லக்கேஜ் பெட்டியை சேர்ந்தது என்பதையும், 801க்கும் மேற்பட்ட என்களை கொண்ட பெட்டிகள் பேன்ட்ரி கார், ஜெனரேட்டர் அல்லது மெயில் பெட்டியை சேர்ந்தது என்பதை குறிக்கிறது.
சென்னை சென்ட்ரலுக்கு முன்பு மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ன தெரியுமா?