சென்னை சென்ட்ரலுக்கு முன்பு மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ன தெரியுமா?
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் இந்தியாவின் மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையமாக உள்ளது. இதற்கு முன்பாக மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்
சென்னை சென்ட்ரலுக்கு முன்பு மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ன தெரியுமா?
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயில் பயணத்தை ஏராளமான மக்கள் விரும்பி வருகின்றனர். தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். இது தவிர முன்பதிவு இல்லாத சாதாரண ரயில்களிலும் பல லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ரயில் நிலையங்கள் 24 மணி நேரமும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
Chennai Central
இந்தியாவில் மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ன தெரியுமா? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நாட்டின் மிக நீளமான பெயரைக் கொண்ட ரயில் நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முழுப் பெயர் புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகும். பிரிட்டிஷ் காலத்தில், இந்த ரயில் நிலையம் மெட்ராஸ் சென்ட்ரல் என்று பெயரிடப்பட்டது. பின்னர் சென்னை சென்ட்ரல் என்று மறுபெயரிடப்பட்டது.
அட! இந்தியாவில் பெயரே இல்லாத ரயில் நிலையம்; தினமும் ரயில்கள் நிற்கும்; டிக்கெட் எப்படி கொடுப்பாங்க?
V.N. Rajuvaripeta Railway station
மீண்டும் 2019 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என மறுபெயரிடப்பட்டது. ஆனால் சென்னை சென்டிரலுக்கு முன்பு மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் எல்லையில் அமைந்துள்ள வி.என். ராஜுவாரிப்பேட்டை ரயில் நிலையம் இருந்தது. இந்த நிலையத்தின் முழுப் பெயர் வெங்கட நரசிம்ம ராஜுவாரிப்பேட்டை ரயில் நிலையம் ஆகும்.
2019ம் ஆண்டுக்கு முன்பு இந்த வி.என். ராஜுவாரிப்பேட்டை நிலையம் நாட்டின் மிக நீளமான பெயரிடப்பட்ட ரயில் நிலையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் 2019ம் ஆண்டில் சென்னை சென்டிரல் முதல் இடத்தை தட்டிச்சென்றதால் வி.என். ராஜுவாரிப்பேட்டை நிலையம் 2வது இடத்துக்கு சென்றது.
Chennai Central Railway Station
சென்னை சென்ட்ரல் ரயில் இந்தியாவில் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அம்மாடியோவ்! ரயில் சக்கரத்தின் எடை இவ்வளவா? 10 பேர் சேர்ந்தா கூட அசைக்க முடியாது போலயே!