இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்… உலகமே இந்தியாவை திரும்ப பார்க்குது.!!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டு, உலகளாவிய எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் இந்தியாவின் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாமல் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை பிரச்சினை
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக உலகின் முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை தற்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிப்ரவரி 28 முதல் இந்த நீரிணை மூடப்பட்ட நிலையில், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியர்களுக்கு ஈரான் நிம்மதி தகவல்
இந்த சூழ்நிலையில், இந்தியர்களுக்கு ஒரு முக்கியமான நிம்மதியான செய்தியை ஈரான் வழங்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிற்கு தேவையான எரிபொருள் விநியோகம் முழுமையாக பாதிக்கப்படாமல் தொடரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
உலக எண்ணெய் பாதை முடக்கம்
மார்ச் மாதத்தில் இருந்து பல்வேறு நாடுகளின் கப்பல்கள் இந்த பகுதியில் சிக்கி உள்ளன. தகவல்களின் படி, 500-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவது முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கப்பல்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு மட்டும் சலுகை
இதுவரை 8 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் வழியாக பாதுகாப்பாக சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், சுமார் 94,000 டன் LPG ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் இந்திய துறைமுகங்களை அடைந்துள்ளன. எனினும், இன்று 19 கப்பல்கள் அந்த பகுதியில் சிக்கியுள்ளன. இதில் எல்பிஜி, கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி ஏற்றிச் சென்ற கப்பல்கள் அடங்கும்.
இந்தியா எரிபொருள் விநியோகம்
இந்த நிலைமை இன்னும் முழுமையாக சரியாக இல்லாத நிலையில், GPS அமைப்புகள் கூட பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், “இந்திய நண்பர்கள் பாதுகாப்பாக உள்ளனர், கவலைப்பட வேண்டாம்” என ஈரான் உறுதி அளித்துள்ளது. உலகளவில் 20% எரிசக்தி இந்த வழித்தடம் மூலம் செல்லும் நிலையில், ஹார்முஸ் நீரிணை நிலைமை தொடர்ந்து உலக பொருளாதாரத்திற்கு முக்கியமானதாகவே இருக்கும்.

