- Home
- இந்தியா
- அதிகாலையில் டெல்லியை புரட்டி போட்ட கனமழை! விமான சேவை பாதிப்பு! குளு குளுவென மாறிய கிளைமேட்!
அதிகாலையில் டெல்லியை புரட்டி போட்ட கனமழை! விமான சேவை பாதிப்பு! குளு குளுவென மாறிய கிளைமேட்!
Delhi Heavy Rain: டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததை அடுத்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தலைநகர் டெல்லியில் மழை
Delhi Heavy Rain: தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் பெய்த கனமழையால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு வகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
ஏர் இந்தியா நிறுவனம்
விமான சேவைகள் பாதிப்பு
சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மழை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமடைந்துள்ளது. 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. பயணிகள் தங்களின் பயணத்திற்கு முன்பாக விமான சேவைகளின் விபரங்களை அறிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தியுள்ளது.
டெல்லியில் நாளை வரை கனமழை எச்சரிக்கை
குளு குளுவென மாறிய டெல்லி
கடந்த சில நாட்களாக டெல்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த திடீர் மழையால் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, டெல்லியில் நாளை வரை இடி மற்றும் பலத்த காற்று கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.