MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஹரியானா பெண் யூடியூபர்! யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஹரியானா பெண் யூடியூபர்! யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். இவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

2 Min read
Author : Rayar r
Published : May 19 2025, 12:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Who is this Spy Jyoti Malhotra?
Image Credit : social media

Who is this Spy Jyoti Malhotra?

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் துப்பாகிச்சூட்டில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கராவதிகளை நமது ராணுவ வீரர்கள் களையெடுத்தனர். இதன்பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு பின்பு முடிவுக்கு வந்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டின்பேரில் ஹரியானாவின் பிரபல யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ராவை போலீசார் கைது செய்தனர்.

24
பாகிஸ்தானில் விஐபியாக வலம் வந்த ஜோதி மல்ஹோத்ரா
Image Credit : X

பாகிஸ்தானில் விஐபியாக வலம் வந்த ஜோதி மல்ஹோத்ரா

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா. யூ டியூபில், 'டிராவல் வித் ஜோ' என்ற டிராவல் சேனலை நடத்தி வருகிறார். பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக நாடு கடத்தப்பட்ட டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரக அதிகாரி டேனிஷ் என்பவருக்கும், ஜோதி மல்ஹோத்ராவுக்கும் பழக்கம் இருந்ததும் டேனிஷ் உதவியால் அவர் பாகிஸ்தான் சென்றதும் தெரியவந்தது. 

மேலும் 2024ம் ஆண்டு பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் 10 நாட்கள் பயணம் மேற்கொண்ட ஜோதி மல்ஹோத்ரா, அங்கு டேனிஸ் உதவியால் போலீஸ் பாதுகாப்புடன் விஐபி போல் நடத்தப்பட்டுள்ளார்.

Related Articles

Related image1
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகைப்பட கலைஞருக்கு ஆயுள் தண்டனை. ஒடிசா நீதி மன்றம் அதிரடி..
Related image2
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானா கல்லூரி மாணவர் கைது
34
ஜோதி மல்ஹோத்ரா வங்கி கணக்குகள் ஆய்வு
Image Credit : X

ஜோதி மல்ஹோத்ரா வங்கி கணக்குகள் ஆய்வு

இதனைத் தொடர்ந்து ஜோதி மல்ஹோத்ரா சீனாவும் சென்றுள்ளார். அவரின் செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த போலீசார், இந்தியா, பாகிஸ்தான் மோதலின்போதும் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

ஜோதி மல்ஹோத்ராவின் வங்கி கணக்கு, அவரின் பயண விவரங்கள், செலவுகள் ஆகியவற்றை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

மற்றொரு யூடியூபருக்கும் தொடர்பு

மேலும் ஜோதி மல்ஹோத்ராவுக்கும், பூரியைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கும் இடையேயான தொடர்புகள் குறித்து ஒடிசா காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

மல்ஹோத்ரா, செப்டம்பர் 2024 இல் பூரிக்குச் சென்று கடலோர நகரத்தில் ஒரு பெண்ணைத் தொடர்பு கொண்டதாகவும், அவர் ஒரு யூடியூபராகவும் இருந்ததாகவும் போலீசார் கண்டறிந்தனர் என்று பூரி காவல் கண்காணிப்பாளர் (SP) வினித் அகர்வால் தெரிவித்தார்.

44
போலீஸ் விசாரணை தீவிரம்
Image Credit : X

போலீஸ் விசாரணை தீவிரம்

"பல்வேறு மத்திய நிறுவனங்கள் மற்றும் ஹரியானா காவல்துறையுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். கள சரிபார்ப்புக்குப் பிறகு ஊடகங்களுடன் விவரங்களைப் பகிர்ந்து கொள்வோம்" என்று அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த விவகாரம் குறித்த விசாரணைக்காக ஒடிசா காவல்துறை பூரி யூடியூபரின் அடையாளத்தை வெளியிடவில்லை.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா-பாகிஸ்தான் போர்
ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு காஷ்மீர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image3
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Related Stories
Recommended image1
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகைப்பட கலைஞருக்கு ஆயுள் தண்டனை. ஒடிசா நீதி மன்றம் அதிரடி..
Recommended image2
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானா கல்லூரி மாணவர் கைது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved