புயலால் கரை ஒதுங்கியதா தங்கம்.? கடற்கரையில் தங்க வேட்டையில் குவியும் மக்கள்
புயல் பாதிப்பால் கடற்கரையில் தங்கத் துகள்கள் கிடைப்பதாகக் கூறப்படுவதால், உள்ளூர் மக்கள் கடற்கரையில் தேடத் தொடங்கியுள்ளனர். உப்பாடா கடற்கரையில் உண்மையிலேயே தங்கம் கிடைக்குமா?
14

Image Credit : PTI
காக்கிநாடா மாவட்டத்தின் உப்பாடா கடற்கரை புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் தங்கத்தை கொண்டு வந்ததாக செய்தி பரவியதால், மக்கள் மணலில் தங்கத் துகள்களை தேடி வருகின்றனர்.
24
Image Credit : Pixabay
புயல் மற்றும் கனமழைக்குப் பிறகு, கடலிலிருந்து பல பொருட்கள் கரை ஒதுங்குவதாக மக்கள் நம்புகின்றனர். தங்கத் துகள்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், புயலுக்குப் பின் மணலை சலித்து தேடுகின்றனர்.
34
Image Credit : Pixabay
மோந்தா புயலால், உப்பாடா கடற்கரையில் ராட்சத அலைகள் கிராமங்களுக்குள் புகுந்தன. இப்போது கடல் அமைதியானதால், மக்கள் கடற்கரையில் தங்கத் துகள்களைத் தேடத் தொடங்கியுள்ளனர்.
44
Image Credit : Pixabay
நூற்றாண்டுகளுக்கு முன் மன்னர்களின் தங்கம் கடலில் மூழ்கியதாக மக்கள் நம்புகின்றனர். புயலின் போது அது கரை ஒதுங்குமென நம்பி, உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் தங்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Latest Videos