- Home
- இந்தியா
- தேவகௌடா பேரன் குற்றவாளி..! பிரிஜ்வால் பலபேரை சீரழித்தது உண்மை! சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தேவகௌடா பேரன் குற்றவாளி..! பிரிஜ்வால் பலபேரை சீரழித்தது உண்மை! சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வீட்டு வேலைக்கார பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 14 மாதங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

14 மாதங்களில் தீர்ப்பு
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் குற்றவாளி என எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மைசூருவில் உள்ள கே.ஆர். நகரைச் சேர்ந்த ஒரு வீட்டு வேலைக்கார பெண் அளித்த பாலியல் பலாத்கார வழக்கில் இந்தத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் வெறும் 14 மாதங்களில் விசாரணை முடிந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தண்டனை விவரங்கள் நாளை (சனிக்கிழமை) அறிவிக்கப்படும்.
நீதிமன்றத்தில் கலங்கிய பிரஜ்வல் ரேவண்ணா
தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் கலங்கிப் போன பிரஜ்வல் ரேவண்ணா, கண்ணீர் விட்டபடி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.
குற்றப் புலனாய்வுத் துறை இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்தது. அதில், பிரஜ்வல் ரேவண்ணா அந்தப் பெண்ணை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவில் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணை மற்றும் வழக்கு நடைபெறும் காலத்தில், பாதிக்கப்பட்ட பெண் தான் பாதுகாத்து வைத்திருந்த ஒரு புடவையை ஆதாரமாகச் சமர்ப்பித்தார். தடயவியல் பரிசோதனையில், அந்தப் புடவையில் விந்து அணுக்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பாலியல் பலாத்காரத்தை நிரூபிப்பதற்கான முக்கிய சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
123 ஆதாரங்கள்
ஆய்வாளர் ஷோபா தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), 2024 டிசம்பர் 31-ல் இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கியது. அடுத்த ஏழு மாதங்களில் நீதிமன்றம் 23 சாட்சிகளை விசாரித்தது. மேலும், வீடியோ கிளிப்கள் குறித்த தடயவியல் ஆய்வுகள் செய்யப்பட்டன.
123 ஆதாரங்களைச் சேகரித்து, ஏறத்தாழ 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.