- Home
- இந்தியா
- Dog பிரியர்களே ஜாக்கிரதை..! இனி நாயை இப்படி வளர்த்தால் உங்கள் பாக்கெட் காலி..! வருகிறது அதிரடி உத்தரவு..!
Dog பிரியர்களே ஜாக்கிரதை..! இனி நாயை இப்படி வளர்த்தால் உங்கள் பாக்கெட் காலி..! வருகிறது அதிரடி உத்தரவு..!
இந்தச் சட்டம் சிறிய குற்றங்களை குற்ற வகையிலிருந்து நீக்கி, அபராதம் அல்லது எச்சரிக்கை என்ற வரம்பிற்குள் கொண்டுவரும் என்று கூறினார். இது நீதிமன்றங்களின் சுமையைக் குறைக்கும். மேலும் பொதுமக்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.

தெரு நாய்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஏற்படுத்திய சலசலப்புக்கு மத்தியில், நாய் பிரியர்களுக்கு இப்போது மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. நீங்கள் ஒரு நாயை வைத்து, அதை கயிறு, காலர் இல்லாமல் வாக்கிங் அழைத்துச் சென்றால், அது உங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்திற்கு வேட்டு வைக்கும்.
மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் பொது அறக்கட்டளை திருத்தம் மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தியது. அதன்படி இரும்புச் சங்கிலி, காலர் இல்லாமல் பொது இடத்தில் நாயை அழைத்துச் சென்றால் அபராதம் ரூ.50 லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதியின்படி, முதல் மீறலுக்கு எச்சரிக்கை வழங்கப்படும். ஆனால், தவறை மீண்டும் அதே தவறைச் செய்தால் ஸ்பாட்டிலேயே அதிகபட்ச அபராதமாக ரூ 1000 செலுத்த வேண்டும். பொது இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம். மேலும் செல்லப்பிராணி நாய் உரிமையாளர்களும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
இந்தப் புதிய மசோதாவில் நாய்கள் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண்பது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு பெரிய படியாக பல மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்தோடு மேலும் சில துறைகளிலும் க்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் கீழ், ஓட்டுநர் உரிமம் காலாவதியான 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று கருதப்படும். வாகனப் பதிவை ஒரு குறிப்பிட்ட பகுதி அலுவலகத்தில் மட்டுமல்ல, மாநிலத்தில் எங்கும் செய்யலாம். வாகனப் பதிவை ரத்து செய்வது குறித்து தெரிவிக்க வேண்டிய நேரம் 14 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, டெல்லி மாநகராட்சி சட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்படும். இப்போது சொத்து வரி பழைய முறையால் கணக்கிடப்படாது. ஆனால் யூனிட் ஏரியா முறையால் கணக்கிடப்படும். இது மதிப்பீட்டை வெளிப்படையாகவும் எளிதாகவும் மாற்றும்.
வணிகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்து, இந்தச் சட்டம் சிறிய குற்றங்களை குற்ற வகையிலிருந்து நீக்கி, அபராதம் அல்லது எச்சரிக்கை என்ற வரம்பிற்குள் கொண்டுவரும் என்று கூறினார். இது நீதிமன்றங்களின் சுமையைக் குறைக்கும். மேலும் பொதுமக்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.
இந்த நடவடிக்கை 'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்' என்ற திசையில் மற்றொரு பெரிய சீர்திருத்தம் என்று அரசு நம்புகிறது.
சொல்லப்போனால், நீங்கள் ஒரு நாய் பிரியராக இருந்தால், உங்கள் செல்ல நாயை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு அதை ஒரு சங்கிலி, காலர் கட்ட மறக்காதீர்கள். இல்லையெனில் எச்சரிக்கைக்குப் பிறகு அடுத்த முறை நீங்கள் அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.