- Home
- இந்தியா
- திமுகவின் சைலண்ட் ஹீரோ! கலைஞர் விசுவாசி..! ஸ்டாலினின் தளபதி! இளைஞர் அணி டூ துணை பொதுச்செயலாளர்! சாமிநாதனின் அசுர வளர்ச்சி!
திமுகவின் சைலண்ட் ஹீரோ! கலைஞர் விசுவாசி..! ஸ்டாலினின் தளபதி! இளைஞர் அணி டூ துணை பொதுச்செயலாளர்! சாமிநாதனின் அசுர வளர்ச்சி!
அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திமுகவின் தீவிர விசுவாசியாகக் கருதப்படுகிறார். வெள்ளக்கோவில் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏவாகவும், கலைஞர் மற்றும் ஸ்டாலின் அமைச்சரவைகளிலும் பணியாற்றியுள்ள இவர், தற்போது திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளக்கோவில் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஆகிய தொகுதிகளில் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். உதயநிதிக்காக தனக்கு கொடுக்கப்பட்ட இளைஞர் செயலாளர் பதவியையே ராஜினாமா செய்தவர். கலைஞரின் அமைச்சரவையிலும், தற்போது ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ள அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கொடுத்த வேலையை சைலண்ட்டாக செய்து சாதித்து காட்டுபவர். ஆரம்பகாலத்தில் இருந்தே திமுக தலைமை கழகத்தில் பயணிக்கும் மூத்த தலைவர்களில் ஒருவர். இதுவரை எந்த சர்ச்சை பேச்சும், விமர்சனங்களுக்கும் உட்படாத திமுகவின் தீவிர விசுவாசி.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தமிழக சட்டமன்றத்துக்கு வெள்ளகோயிலில் தொகுதியிலிருந்து மூன்று 1996, 2001, 2006 ஆகிய மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூர் மாவட்ட திமுக செயலாளராக இருந்தார். இவர் முன்னாள் அமைச்சர் துரை. ராமசாமியை தோற்கடித்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன். முன்னாள் அமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்முதலில் கலைஞர் அமைச்சரவையில் 2006 அன்று தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கட்சியிலும் மாவட்ட திமுகவில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் படிப்படியாக வளர்ந்தவர் தான் சாமிநாதன் அவரின் வளர்ச்சி திமுகவிலுள்ள மூத்த தலைவர்களே வியந்து பார்க்கும் அளவிற்கு தான் இருந்துள்ளது. முதலில் "1986 ல் தமிழ் காக்க இந்தி திணிப்புக்கு எதிரான சட்ட நகல் போராட்டத்தில் கலந்து கொண்டு, கோவை சிறையில் 45 நாட்கள் சிறைவாசம் இருந்தவர் மு.பெ.சாமிநாதன். அதில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் இளைஞரணியில் பயணித்தவர்.
இளைஞர் அணியில் உறுப்பினராக ஒன்றிய அளவில் இருந்து பணியாற்றி, அதற்குப் பிறகு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில் துணை அமைப்பாளராக கடமையை நிறைவேற்றி, அதன் பிறகு மாவட்ட அமைப்பாளராகவும் இடையில் மாவட்டக் கழகத்தின் செயலாளராகவும், நான் இளைஞர் அணியில் செயலாளராக இருந்தபோது எனக்கு துணை நின்று துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து பணியாற்றி, அதற்குப் பின்னால் இணைச் செயலாளராகவும், நான் செயல் தலைவராக பொறுப்பேற்றதற்குப் பின்னால், இளைஞர் அணியில் செயலாளராகவும் பொறுப்பேற்று உயர்நிலை செயல் திட்டக்குழுவில் உறுப்பினர்களில் ஒருவராக இருந்துள்ளார். இடையில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை கலைஞர் தலைமையில் அமைந்திருந்த அமைச்சரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.
இப்போது தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி, கலை பண்பாட்டு துறை அமைச்சராக உள்ளார் மு.பெ.சாமிநாதன் இந்நிலையில் அவருக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ளது. அமைச்சர் சாமிநாதனின் இந்த வளர்ச்சி உண்மையாகவே பிரமிப்பை தான் கொடுக்கும் கட்சியிலும், மக்கள் மத்தியிலும் எந்த ஒரு சர்ச்சையில் சிக்காதவர், எந்த ஒரு விமர்சனத்திற்கும் ஆளாகாதவர். குறிப்பாக கோஷ்டி அரசியல் செய்ய தெரியாதவர்.