MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • தீபாவளி ஜாக்பாட்.! ரேஷன் கடையில் இனி இரண்டு முறை அரசி, சக்கரை வாங்கலாம்- அரசு புதிய அறிவிப்பு

தீபாவளி ஜாக்பாட்.! ரேஷன் கடையில் இனி இரண்டு முறை அரசி, சக்கரை வாங்கலாம்- அரசு புதிய அறிவிப்பு

தீபாவளி பண்டிகை இம்மாத இறுதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில், குறிப்பிட்ட ரேஷன் கார்டுகளுக்கு மாதம் 2 முறை ரேஷன் பொருள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Oct 09 2024, 11:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ration Shop

Ration Shop

இந்தியா வளரும் நாடாகக் கருதப்பட்டாலும் நாட்டில் குறிப்பிட்ட சதவீத மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், ஒவ்வொரு வேளை உணவுக்கும் கஷ்டப்படும் நிலை தான் தற்போதும் நீடிக்கிறது. அப்படிப்பட்டவர்களை மனதில் கொண்டு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், மண்ணெண்னை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மிகவும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Ration Shop

Ration Shop

தமிழகத்தில் அரிசி இலவசமாகவும், பிற பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பொருட்கள் அதன் தேவைக்கு ஏற்ப இலவசமாகவோ மலிவு விலையிலோ அரசின் பங்களிப்போடு வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தமிழர் திருநாளான பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக தமிழக மக்களுக்கு பொங்கல் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

34
Ration Shop

Ration Shop

பொங்கல் பரிசு தொகுப்பை போன்று பல மாநிலங்களில் அந்தந்த மாநில பண்டிகைக்கு தகுந்தவாறு சலுகை பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது தீபாவளி பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படவுள்ள நிலையில் பசுமை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மாதம் இரு முறை ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

44
Ration Shop

Ration Shop

இது தொடர்பாக ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பசுமை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மாதம் இரு முறை ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் பசுமை ரேஷன் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இந்த கார்டு வைத்திருக்கும் நபர்கள் அரிசியை கிலோ ரூ.1 என்ற அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் இந்த கார்டு வைத்திருக்கும் நபர்கள் இரு முறை ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரேஷன் கடை
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Railway Rules: பிளாட்பாரத்துல சுத்துனா ஜெயில்? ரயில்வேயின் 'டாப் சீக்ரெட்' விதிகள்.. பயணிகள் உஷார்!
Recommended image2
CM Vijay: இம்மாத இறுதியில் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்..! பிரதமருடன் முக்கிய சந்திப்பு..
Recommended image3
மொத்தமாக மாறும் விதிமுறை..? நோட்டமிடும் Income Tax.. ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved