MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இந்த நோய்களுக்கு ஆயுஷ்மான் கார்டில் இலவச சிகிச்சை கிடையாது.. மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை

இந்த நோய்களுக்கு ஆயுஷ்மான் கார்டில் இலவச சிகிச்சை கிடையாது.. மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை

ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆனால் அனைத்து மருத்துவ செலவுகளும் இந்த திட்டத்தில் சேராது என்பதைக் கவனிக்க வேண்டும்.

2 Min read
Author : Raghupati R
Published : May 27 2026, 09:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
Image Credit : Social media

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

இன்றைய காலத்தில் ஒரு பெரிய நோய் குடும்பத்தின் பல வருட சேமிப்பையே காலி செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டம் முக்கிய ஆதரவாக இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், “ஆயுஷ்மான் கார்டு இருந்தால் எல்லா சிகிச்சையும் இலவசம்” என்ற நம்பிக்கை முற்றிலும் சரியானது அல்ல.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆயுஷ்மான் கார்டு
Image Credit : Getty

ஆயுஷ்மான் கார்டு

இந்த திட்டத்தின் முதல் முக்கிய விதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கே பலன் கிடைக்கும் என்பதுதான்.

• சாதாரண காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற OPD ஆலோசனைகள்

• மருத்துவர் கட்டணம்

• ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே உள்ளிட்ட வெளிநோயாளர் பரிசோதனைகள்

இவை பொதுவாக திட்டத்தில் சேராது. அதனால் மருத்துவமனைக்கு செல்லும் முன் எந்த சேவை இலவசம் என்பதை உறுதி செய்வது அவசியம்.

Related Articles

Related image1
CM Vijay: பிரதமர் மோடியை, சந்தித்த முதல்வர் விஜய்..! மேகதாது, தமிழ்தாய் வாழ்த்து குறித்து விவாதிப்பு
Related image2
Now Playing
TN Govt Scheme: 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!
35
அரசு மருத்துவ காப்பீடு
Image Credit : Getty

அரசு மருத்துவ காப்பீடு

ஆயுஷ்மான் திட்டத்தில் பல முக்கிய நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளன.

• இதய நோய், இதயஅடைப்பு, ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் சிகிச்சை

• புற்றுநோய்க்கான கீமோதெரபி, ரேடியேஷன் மற்றும் பல்வேறு புற்றுநோய் சிகிச்சைகள்

• பக்கவாதம், மூளை கட்டி, நரம்பியல் பாதிப்புகள்

• டயாலிசிஸ், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள்

• எலும்பு முறிவு, மூட்டு அறுவை சிகிச்சை

• பிரசவம், சிசேரியன் மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைகள்

இதில் அடங்கும்.

45
இடம்பெறாத மருத்துவ சேவைகள்
Image Credit : Gemini

இடம்பெறாத மருத்துவ சேவைகள்

ஆனால் சில மருத்துவ சேவைகள் திட்டத்தில் இடம்பெறவில்லை.

• அழகுக்கான அறுவை சிகிச்சை

• சோதனைக்குழாய் குழந்தை சிகிச்சை

• பொதுவான பல் சிகிச்சை

• வைட்டமின் மற்றும் சப்ளிமெண்ட் செலவுகள்

• போதைப் பழக்கம் அல்லது சுயகாயம் தொடர்பான சிகிச்சைகள்

இவற்றுக்கான செலவுகளை நோயாளிகளே ஏற்க வேண்டியிருக்கும்.

55
மருத்துவ செலவு உதவி
Image Credit : ChatGPT

மருத்துவ செலவு உதவி

மருத்துவ சிகிச்சையை தொடங்குவதற்கு முன் மருத்துவமனையில் உள்ள ஆயுஷ்மான் உதவி மையத்தில் தகவல் பெறுவது முக்கியம். மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில்தான் இந்த திட்டம் செயல்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சரியான தகவலை முன்கூட்டியே தெரிந்துகொண்டால், தேவையற்ற செலவுகளையும் மருத்துவச் சிக்கல்களையும் தவிர்க்கலாம் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆரோக்கியம்
இந்தியா
அரசு திட்டம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay: பிரதமர் மோடியை, சந்தித்த முதல்வர் விஜய்..! மேகதாது, தமிழ்தாய் வாழ்த்து குறித்து விவாதிப்பு
Recommended image2
Heat Wave : சுட்டெரிக்கும் வெயிலில் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!
Recommended image3
SIR Controversy : SIR-ல் பெயர் நீக்கப்பட்டவர்களின் இந்திய குடியுரிமை பாதிக்குமா? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Related Stories
Recommended image1
CM Vijay: பிரதமர் மோடியை, சந்தித்த முதல்வர் விஜய்..! மேகதாது, தமிழ்தாய் வாழ்த்து குறித்து விவாதிப்பு
Recommended image2
Now Playing
TN Govt Scheme: 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved