டூப்பை அனுப்பி வைத்த புடின்? அலாஸ்காவில் டிரம்பை சந்தித்தது யார்?
அலாஸ்காவில் டிரம்பை சந்தித்தது புடினா இல்லையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. நெட்டிசன்கள் புடினின் தோற்றம் மற்றும் நடையைச் சுட்டிக்காட்டி, அவர் பாடி டபிள் (Body Double) என சந்தேகிக்கின்றனர்.

டிரம்பை சந்தித்தது விளாடிமிர் புடின் இல்லையா?
அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்தித்தார். ஆனால், இந்த சந்திப்பில் கலந்துகொண்டவர் உண்மையான விளாடிமிர் புடின் இல்லை என்றும், அவருடைய 'உடல் இரட்டையர்களில்' (Body double) ஒருவர் தான் என்றும் சதி கோட்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
சந்தேகங்களுக்கான காரணங்கள்
நெட்டிசன்கள் தங்கள் சந்தேகங்களுக்கு புடினின் தோற்றத்தையும், நடையையும் காரணமாகக் காட்டுகின்றனர். அலாஸ்காவுக்கு வந்த புடினின் கன்னங்கள் சற்று பருமனாக இருப்பதாகவும், வழக்கத்தை விட மிகவும் கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஒரு பயனர், “அலாஸ்காவுக்கு வந்தவர் புடினின் பாடி டபிள் நம்பர் 5 என நினைக்கிறேன். அவர் புடின் போல இல்லை. அவரது கன்னங்கள் உப்பலாக உள்ளன. மேலும், அவர் வழக்கமாக ஒரு கையை அசைக்காமல், கேஜிபி பாணியில் நடக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “அலாஸ்காவுக்கு அனுப்பப்பட்டது உண்மையான புடின் இல்லை” என்று கூறியுள்ளார்.
புடினின் 'கன்ஸ்லிங்கர் நடை'
புடினின் தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட பாடி டபிள்களை பயன்படுத்துவது குறித்த ஊகங்கள் புதிதல்ல. புடின் பெரும்பாலும் 'கன்ஸ்லிங்கர் நடை'யைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த நடையின்படி, அவரது வலது கை அசைக்காமல் உடலை ஒட்டி நிலையாக இருக்கும். அதே நேரத்தில், இடது கை சாதாரணமாக அசைந்துகொண்டிருக்கும்.
கேஜிபி பயிற்சி
நரம்பியல் நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு மருத்துவ பிரச்சினை அல்ல. அவரது கேஜிபி பயிற்சியின் காரணமாகவே இந்த நடை இருப்பதாகக் கூறப்படுகிறது. சோவியத் பாதுகாப்பு சேவையில் இருந்தபோது, ஏதேனும் அவசரநிலையில் துப்பாக்கியை விரைவாக எடுக்க வசதியாக, முகவர்கள் தங்கள் ஆயுதத்தை வைத்திருக்கும் கையை (வலது கை) மார்புக்கு அருகில் அல்லது கைத்துப்பாக்கி உறைக்கு அருகில் வைத்து நடக்கப் பயிற்றுவிக்கப்பட்டனர்.
புடின் மறுப்பு
இதுபோன்ற சிறிய வித்தியாசங்களே அலாஸ்காவுக்கு வந்தவர் புடின் அல்ல என்று அடையாளம் காண உதவுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஏற்கெனவே பாடி டபிள் போல யாரையும் தான் பயன்படுத்துவது இல்லை என புடின் மறுத்துள்ளார்.