MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி! பயங்கரவாதத்தை வேரறுப்போம் என உறுதி!

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி! பயங்கரவாதத்தை வேரறுப்போம் என உறுதி!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம் என அவர் தெரிவித்தார். 

2 Min read
Rayar r
Published : Apr 25 2025, 04:11 PM IST| Updated : Apr 25 2025, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Rahul Gandhi met the injured in Pahalgam attack: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் இருபது பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ள இந்தியா, அந்த நாட்டுடன் செய்து கொண்ட சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. மேலும் பாகிஸ்தான் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

24
Congress MP Rahul Gandhi

Congress MP Rahul Gandhi

ராகுல் காந்தி நேரில் ஆறுதல் 

இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் வந்த எதிர்க்கட்சித தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து பேசினார். பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீநகரின் பதாமிபாக் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்ற ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டார். 

ஒற்றுமையாக நிற்பது அவசியம் 

மேலும் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரையும் நேரில் சந்தித்து ராகுல் காந்தி பேசினார். அப்போது சம்பவம் குறித்து இருவரும் ராகுல் காந்தியிடன் விளக்கினார்கள். பின்பு இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,''பயங்கரவாதிகள் செய்ய முயற்சிப்பதை நாம் முறியடிக்க ஒவ்வொரு இந்தியரும் ஒற்றுமையாக,  நிற்பது மிகவும் முக்கியம். காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளை சிலர் தாக்குவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது'' என்றார்.

பஹல்காம் தாக்குதலுக்கு மூளை ஹபீஸ் சயீத்! உதவி செய்தது பாகிஸ்தான் உளவுத்துறை! பகீர் தகவல்!

34
Pahalgam Terror Attack

Pahalgam Terror Attack

பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும் 

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ''நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக நின்று, எடுக்கப்பட்ட இந்த மோசமான நடவடிக்கையை எதிர்த்துப் போராடி, பயங்கரவாதத்தை முற்றிலுமாக தோற்கடிப்பது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் முதலமைச்சரையும் துணைநிலை ஆளுநரையும் சந்தித்தேன், அவர்கள் என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு விளக்கினர், மேலும் காங்கிரஸ் கட்சியும் நானும் அவர்களுக்கு முழு ஆதரவளிப்போம் என்று இருவருக்கும் உறுதியளித்தேன்'' என்று கூறினார்.
 

44
Rahul Gandhi, Congress

Rahul Gandhi, Congress

அனைத்து கட்சிகளும் ஆதரவு 

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கட்சிகளுக்கு விளக்கமளிக்க மத்திய அரசு நேற்று கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். பயங்கரவாதத்துக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு  தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். இதேபோல் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்குதேசம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவையும் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் சம்பவம்! மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய தேசிய காங்கிரஸ்
பாகிஸ்தான்
இந்தியா
ராகுல் காந்தி
Latest Videos
Recommended Stories
Recommended image1
ராகுல், பிரியங்காவுக்கு அரசியல் அறிவே கிடையாது..! 25 மடங்கு புத்தியுள்ள தலைவர்கள் வேண்டும்..! சோனியாவின் உதவியாளர் மகன் கொதிப்பு..!
Recommended image2
29 வயது நிதினுக்காக 45 வயது சந்தியா செய்த வேலையை பார்த்தீங்களா! போலீசிடம் சிக்கியது எப்படி?
Recommended image3
மேற்கு வங்கத்தில் மற்றொரு BLO மரணம்! SIR பணிச்சுமையால் 4 பேர் உயிரிழப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved