தணிந்தது இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்.! 32 விமான நிலையங்களையும் திறக்க உத்தரவு
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து, இரு நாடுகளுக்கிடையே போர் சூழல் உருவானது. இதனையடுத்து மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்
பஹல்காமில் இந்திய சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்தது. இதன் காரணமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இறந்ததாக கூறப்பட்டது.
இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை மாநிலங்களான ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் மீது ட்ரோன் மற்றும் ஏவுகனைகளை கொண்டு தாக்கியது. இதனை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.
32 விமான நிலையங்களை மூட உத்தரவு
இதனையடுத்து இந்திய ராணுவமும் பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்களை தாக்கி அளித்தது. இதில் 30க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த சூழ்நிலையில் இரு நாட்டிற்கும் இடையே போர் சூழல் உருவானது. இருதரப்பும் மாறி மாறி ட்ரோன் மற்றும் ஏவுகனைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனால் எல்லையோரங்களில் பதற்றமான நிலை நீடித்தது. இதனையடுத்து இந்திய வான் வெளி மூடப்பட்டது.
குறிப்பாக குலு-மணாலி, லே, லூதியானா, முண்ட்ரா, நாலியா, பாதான்கோட், பட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட், சர்ஸாவா, ஷிம்லா, ஸ்ரிநகர், தோய்ஸ், உத்தர்லை அதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபோர், பதிந்தா,
32 விமான நிலையங்களை திறக்க உத்தரவு
பூஜ், பிகானேர், சந்திகர், ஹல்வாரா, ஹிண்டான், ஜெய்சல்மேர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கண்ட்லா, காங்க்ரா, கேஷோட், கிஷங்கட், ஆகியவை. இந்த விமான நிலையங்களில் அனைத்து சிவில் விமான நடவடிக்கைகளும் மே 15 ம் தேதி வரை விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து எல்லையோரங்களில் பதற்ற சூழ்நிலை தணிந்துள்ளது. இதனையடுத்து மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.