சமையல் எரிவாயு விலை அதிரடியாக குறைந்தது.! எவ்வளவு தெரியுமா.?
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஜூன் 1 முதல் ₹25 குறைக்கப்பட்டு ₹1881 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை, ₹868.50-க்கு விற்பனை தொடர்கிறது.

சமையல் எரிவாயு விலை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்து புதிய விலையானது நிர்ணயிக்கப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் ஒவ்வொரு மாதமும் தொடக்கமான ஒன்றாம் தேதி எரிவாயு விலையை நிர்ணயித்து வருகின்றன.
ஜூன் 1 ஆம் தேதி வர்த்தக எரிவாயு விலை என்ன.?
அந்தவகையில் சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையானது கடந்த மே மாதம் 1ஆம் தேதி 15 ரூபாய் 50 பைசா குறைக்கப்பட்டது. 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1906 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து விலை மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதியான இன்று சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக எரிவாயு விலையில் மாற்றமில்லை
அதன் படி இன்று முதல் 1881 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.868.50 என்ற அளவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் வர்த்தக சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டதையடுத்து ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமையல் எரிவாயு விலை
கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சிலிண்டருக்கு 50 ரூபாய் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது