life-style

LPG Cylinder -ஐ இப்படி யூஸ் பண்ணா அதிக நாள் வரும்!

Image credits: Pinterest

பர்னரை சுத்தமாக வைத்திருங்கள்

கேஸ் அடுப்பில் இருக்கும் பர்னர் அடிக்கடி அழுக்காகும். இதனால் கேஸ் அதிகம் ஆக வீணாகும். எனவே பர்னரை சுத்தம் செய்து அடுப்பை ஆன் பண்ணவும்.

குழாய் இணைப்பை சரிபார்க்கவும்

பல சமயங்களில் கேஸ் அடுப்பின் குழாய் இணைப்பிற்குள் குப்பைகள் சேர்ந்து விடும் (அ) அதில் உடைந்து இருக்கும். இதனால் சிலிண்டரில் இருக்கும் கேஸ் ஒழுங்காக அடுப்பில் போகாமல் வீணாகும்.

உலர்ந்த பாத்திரங்களைப் பயன்படுத்தவும்

அடுப்பில் ஈரமான பாத்திரங்களை வைத்தால் அது உலர அதிக நேரம் எடுக்கும். இதனால் கேஸ் வீணாகும். எனவே, சிலிண்டர் அதிக நேரம் இயங்க வேண்டுமெனில், உலர்ந்த பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள்.

மூடி வைத்து சமைக்கவும்

ஆம், நீங்கள் சீக்கிரமாக சமைத்து முடிக்கவும் கேஸ் வீணாகாமல் இருக்கவும் மூடி வைத்து சமைக்கவும். மூடி வைப்பதால் உணவு விரைவாக ஆவியாகிறது.

ப்ரிட்ஜில் எடுத்ததை உடனே சமைக்காதே

ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த பொருட்களை உடனே சமைத்தால் அதிக நேரம் எடுக்கும், கேஸ்சும் வீணாகும். எனவே அறை வெப்பநிலையில் சிறிது நேரம் வைத்து பின் சமைக்கவும்.

குக்கர் பயன்படுத்தவும்

திறந்த பாத்திரத்தில் உணவு ரெடியாவதற்கு அதிக நேரம் எடுக்கும் மற்றும் கேஸும் வீணாகும். எனவே நீங்கள் குக்கரை பயன்படுத்துங்கள்.

சிலிண்டரை அணைக்க மறக்காதீர்கள்

கேஸ் அடுப்பில் சமைத்து முடித்து பிறகு சிலிண்டரை உடனே அணைக்கவும். இல்லையெனில், பல நேரங்களில் கசிவு ஏற்பட்டு, கேஸ் வீணாகும் வாய்ப்பு உள்ளது.

Find Next One