MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Scholarship : மாணவர்களுக்கு ₹12,000 தரும் மத்திய அரசு! யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?

Scholarship : மாணவர்களுக்கு ₹12,000 தரும் மத்திய அரசு! யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?

Scholarship : ஏழை மாணவர்கள் படிப்பு பாதியில் நிற்கக் கூடாது என மோடி அரசு கொண்டுவந்துள்ள 'நேஷனல் மீன்ஸ் கம் மெரிட்' திட்டத்தில் தகுதியானோருக்கு ஆண்டுக்கு ₹12,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Sep 04 2026, 12:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹12,000 உதவித்தொகை
Image Credit : Chatgpt

மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹12,000 உதவித்தொகை

படிப்பைத் தொடர்வதற்குப் பணம் தடையாக இருக்கக் கூடாது என்ற சூழலைக் கருத்தில் கொண்டு, மோடி அரசு மாணவர்களுக்காக ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹12,000 உதவித்தொகை வழங்கப்படும்.

இதையும் படிங்க : Ginger : இஞ்சி தோலை ஏன் உரிக்கிறோம்? உண்மை தெரிஞ்சா இனி தூக்கிப் போட மாட்டீங்க!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
என்.எம்.எம்.எஸ். கல்வி உதவித்தொகை திட்டம்
Image Credit : Gemini AI

என்.எம்.எம்.எஸ். கல்வி உதவித்தொகை திட்டம்

'நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்' என்ற கல்வி உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ₹12,000 வழங்கப்படும். இத்திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : குழந்தைகளுக்கான 6 அட்டகாசமான சில்வர் காப்பு டிசைன்கள்!

Related Articles

Related image1
Government Employees : அரசு ஊழியர்கள் கைல எவ்ளோ காசு எடுத்துட்டு போலாம் தெரியுமா?
Related image2
Free House : இலவச வீடு வழங்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
36
நேஷனல் மீன்ஸ் கம் மெரிட்
Image Credit : Getty

நேஷனல் மீன்ஸ் கம் மெரிட்

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்' திட்டம் 2026-27 கல்வி ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வரும் செப்டம்பர் 30-ஆம் தேதியே கடைசி நாளாகும். எனவே, இந்த உதவித்தொகையைப் பெற விரும்பும் தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க : Relationship : நீண்ட காலம் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா?

46
உதவித்தொகைக்கான தகுதி விவரங்கள்
Image Credit : Gemini

உதவித்தொகைக்கான தகுதி விவரங்கள்

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹3.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், முந்தைய 7ஆம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான கிரேடு பெற்றிருப்பது அவசியமாகும். இதில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5% தளர்வு வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Marriage : கணவனுக்கு தாலி கட்டிய மனைவி! இந்த வினோத திருமணத்தின் பின்னணி இதுதான்!

56
இரண்டு கட்டம்
Image Credit : getty

இரண்டு கட்டம்

ஒவ்வொரு ஆண்டும் 9ஆம் வகுப்பு படிக்கும் 1 லட்சம் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் இதனைப் பெறலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் இரண்டு கட்டங்களாகச் சரிபார்க்கப்படுகின்றன; முதற்கட்டமாக இன்ஸ்டிடியூட் நோடல் அதிகாரியாலும், இரண்டாம் கட்டமாக மாவட்ட நோடல் அதிகாரியாலும் இவை பரிசீலிக்கப்பட்டு உறுதிசெய்யப்படுகின்றன.

இதையும் படிங்க : Dosa : தோசை கல்லுல ஒட்டாம, ரவுண்டா, மொறு மொறுன்னு சுடுறது எப்படி? தோசை மாஸ்டரின் 8 டிப்ஸ் இதோ!

66
ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டம்
Image Credit : Pexels

ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டம்

வறுமை காரணமாகப் படிப்பைப் பாதியில் கைவிடும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு, மத்திய கல்வி அமைச்சகம் 'நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்' திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு உடனே விண்ணப்பித்து முழுமையாகப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க : Gold Necklace : 10 கிராமில் அட்டகாசமான லைட் வெயிட் நெக்லஸ் டிசைன்கள்!

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இந்திய அரசு
உதவித்தொகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: OROP வருமா? அரசு ஊழியர்களின் பென்ஷன் பாகுபாடு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?
Recommended image2
8th Pay Commission: இந்த ஒரு முடிவு எடுத்தா போதும்... ரூ.29 லட்சம் வரை கூடுதல் சம்பளம்?! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!
Recommended image3
Marriage : கணவனுக்கு தாலி கட்டிய மனைவி! இந்த வினோத திருமணத்தின் பின்னணி இதுதான்!
Related Stories
Recommended image1
Government Employees : அரசு ஊழியர்கள் கைல எவ்ளோ காசு எடுத்துட்டு போலாம் தெரியுமா?
Recommended image2
Free House : இலவச வீடு வழங்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved