MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மேற்கு வங்கத்தில் வரலாறு படைத்த பாஜக.. மம்தாவின் கோட்டையைத் தகர்த்தது எப்படி?

மேற்கு வங்கத்தில் வரலாறு படைத்த பாஜக.. மம்தாவின் கோட்டையைத் தகர்த்தது எப்படி?

மேற்கு வங்கத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சியை பிடித்து வரலாறு படைத்துள்ளது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக வாரிச்சுருட்டியது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : May 04 2026, 07:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மேற்கு வங்கத்தில் பாஜக பிரம்மாண்ட வெற்றி
Image Credit : AI

மேற்கு வங்கத்தில் பாஜக பிரம்மாண்ட வெற்றி

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக ஒரு பிரம்மாண்ட வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. இப்போதைய நிலவரப்படி, பாஜக 200 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சில தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வரலாறு காணாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் 82 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 82 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது மற்றும் 5 இடங்களில் வெற்றி பெற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் இந்தத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மற்றும் ஆம் ஜனதா உன்னயன் கட்சி (AJUP) தலா 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [CPI(M)] ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. இந்தக் கட்சிகள் எதுவும் இதுவரை ஒரு இடத்தில் கூட வெற்றியை உறுதி செய்யவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
திரிணாமுல் கோட்டையில் கெத்து காட்டிய பாஜக
Image Credit : ANI

திரிணாமுல் கோட்டையில் கெத்து காட்டிய பாஜக

2021 தேர்தலில் பாஜக சுமார் 38% வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால் இந்த 2026 தேர்தலில், பாஜகவின் வாக்கு சதவீதம் சுமார் 45% ஆக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 7% அதிகரிப்பாகும். அதேசமயம், ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 48%-லிருந்து 41%-ஆகச் சரிந்துள்ளது. குறிப்பாக, மம்தா பானர்ஜியின் கோட்டையாகக் கருதப்பட்ட தெற்கு வங்காளத்தின் கிராமப்புறங்களில் பாஜக பெரும் ஊடுருவலை நிகழ்த்தியுள்ளது.

சுவேந்து அதிகாரி முக்கிய காரணம்

நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, இந்த வெற்றியின் முக்கிய முகமாகப் பார்க்கப்படுகிறார். குறிப்பாக, முதல்வர் மம்தா பானர்ஜியின் சொந்தத் தொகுதியான பவானிபூரில் பாஜக கடும் போட்டியை அளித்து முன்னிலை பெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Related image1
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000.. 3 சிலிண்டர் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. பாஜக தேர்தல் அறிக்கை!
Related image2
எம்.ஜி.ஆருக்கு பின் ஒரு சரித்திரம்.. கோட்டையை கைப்பற்றிய தளபதி விஜய்.. சிபி சத்யராஜ் நெகிழ்ச்சி!
33
சிறுபான்மையின வாக்குகளை அள்ளிய பாஜக
Image Credit : ANI

சிறுபான்மையின வாக்குகளை அள்ளிய பாஜக

மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு தினாஜ்பூர் போன்ற மாவட்டங்களில் பாரம்பரியமாக திரிணாமுல் காங்கிரஸுக்கே கிடைத்து வந்த சிறுபான்மையின வாக்குகள், இந்த முறை சிதறியுள்ளன. இது பாஜகவின் வெற்றிக்கு மறைமுகமாகப் பெரிதும் உதவியுள்ளது. மேலும், மத்திய அரசு கொண்டு வந்த சில தொழில்மயமாக்கல் வாக்குறுதிகள் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 294 இடங்களில் 213 இடங்களை வென்று, சுமார் 48% வாக்குகளுடன் தனிப்பெரும்பான்மை பெற்றது. அப்போது பாஜக 77 இடங்களை வென்று, சுமார் 38% வாக்குகளுடன் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பிஜேபி
அரசியல்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Mine : இந்தியாவின் அடுத்த KGF இந்த மாநிலமா? மண்ணுக்கடியில் கொட்டிக்கிடக்கும் 50 டன் தங்கம்!
Recommended image2
Amazing Facts: இந்தியாவுக்கு கிழக்கில் இருந்தும் 'மேற்கு வங்கம்' என பெயர் வந்தது எப்படி? சுவாரஸ்யமான தகவல்கள்.!
Recommended image3
Harsha Sai: ஓடிட்டாருனு பேசினாங்க.. மீண்டும் வந்த பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய்.. வைரலாகும் புதிய வீடியோ
Related Stories
Recommended image1
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000.. 3 சிலிண்டர் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. பாஜக தேர்தல் அறிக்கை!
Recommended image2
எம்.ஜி.ஆருக்கு பின் ஒரு சரித்திரம்.. கோட்டையை கைப்பற்றிய தளபதி விஜய்.. சிபி சத்யராஜ் நெகிழ்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved