MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இந்தியாவில் முதல் பிளாட்பார்மே இல்லாத பிசியான ரயில் நிலையம்; எங்கு உள்ளது தெரியுமா?

இந்தியாவில் முதல் பிளாட்பார்மே இல்லாத பிசியான ரயில் நிலையம்; எங்கு உள்ளது தெரியுமா?

இந்தியாவில் உள்ள பிசியான ரயில்நிலையம் ஒன்றில் முதல் பிளாட்பார்மே கிடையாது அதன் சுவாரஸ்ய பின்னணி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Oct 23 2024, 08:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Railway Station Without 1st Platform

Railway Station Without 1st Platform

உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் ஆக இந்திய ரயில்வே இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் இருக்கும். அதில் இருந்து தான் பயணிகள் ரயிலில் ஏறி பயணிக்க முடியும். அப்படி ரயில் நிலையங்களில் இருக்கும் பிளாட்பாரங்கள் நம்பர் அடிப்படையில் தான் குறிப்பிடப்படும். அதன்படி 1ம் நம்பரில் இருந்து தான் பிளார்ட்பார்ம் தொடங்கும். ஆனால் ஒன்றாவது பிளாட்பார்மே இல்லாத ஒரு விநோத ரயில் நிலையம் இந்தியாவில் இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Barauni Railway Station

Barauni Railway Station

அந்த ரயில்நிலையம் பீகாரில் அமைந்துள்ளது. பீகாரில் உள்ள பெகுசாராய் மாவட்டத்தில் கடந்த 1860-ம் ஆண்டு கதாரா ரயில்நிலையம் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஒரு பிளாட்பார்ம் உடன் இயங்கி வந்த அந்த ரயில் நிலையம் 1883-ம் ஆண்டு மூடப்பட்டது. பின்னர் அதிலிருந்து வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் பிரவுனி ரயில்நிலையம் கட்டப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் பிரவுனி ரயில்நிலையம் வழியாக சென்று வருகின்றன.

இதையும் படியுங்கள்... இந்த வயது வரையிலான குழந்தைகள் ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் தெரியுமா?

34
Barauni Railway Station in Bihar

Barauni Railway Station in Bihar

பீகாரில் உள்ள பிசியான ரயில்நிலையங்களில் இந்த பிரவுனி ஸ்டேஷனும் ஒன்று. அந்த ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் சுமார் 1 லட்சம் பயணிகள் தினசரி பயணம் செய்கின்றனர். இந்த ரயில்நிலையத்தில் தான் ஒன்றாவது பிளாட்பார்மே கிடையாது. ஏனெனில் கதாரா ரயில்நிலையம் ஒன்றாவது பிளாட்பார்மை கொண்டிருந்ததால், அதன் அருகில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையத்திற்கு ஒன்றாவது பிளாட்பாரத்தை ரயில்வே ஒதுக்கீடு செய்யவில்லை.

44
Barauni Railway Station without 1st platform

Barauni Railway Station without 1st platform

இதன்காரணமாக இரண்டாவது பிளாட்பாரத்தில் இருந்து பிரவுனி ரயில் நிலையம் இயங்கி வருகிறது. இந்தியாவிலேயே ஒன்றாவது பிளாட்பார்ம் இல்லாத ரயில் நிலையம் என்கிற பெருமையையும் இந்த பிரவுனி ரயில் நிலையம் பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 9 பிளாட்பாரங்கள் உள்ளன. பீகார் மாநிலத்தில் இயங்கி வரும் பிரதான ரயில் நிலையங்களில் இந்த பிரவுனி ரயில் நிலையமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இந்த ரயிலில் நீங்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.. எங்கு இருக்கு தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IndiGo: ஒரு பயணிக்கு ரூ.590 கூடுதல் வருமானம்! இத்தனை நாள் இதுதெரியாம போச்சே
Recommended image2
நவம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்.! ஜிஎஸ்டி முதல் மொபைல் அழைப்புகள் வரை 5 புதிய விதிகள் – முழு விவரம்!
Recommended image3
இனி GPS தேவையில்லை? ISROவின் புதிய சாதனை.. செல்போன் முதல் ராணுவம் வரை கிடைக்கப்போகும் அதிரடி பலன்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved