அடுத்த அதிர்ச்சி! பெரும் விபத்தில் இருந்து தப்பிய ஏர் இந்தியா விமானம்! நடந்தது என்ன?
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது ஏற்பட்டதால், கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
ஏர் இந்தியா விமானம்
Air India Flight: கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் அமதாபாத் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் உட்பட 241 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து விமானத்தில் கோளாறு
இதையடுத்து ஹஜ் பயணிகளுடன் லக்னோ வந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனிடையே ஹாங்காங்கிலிருந்து நேற்று டெல்லி வர இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. நடுவானில் பறந்த போது விமானி, தொழில்நுட்பக் கோளாறை கண்டறிந்த நிலையில், மீண்டும் விமானத்தை ஹாங்காங்கிற்கு திருப்பி பயணிகளை காப்பாற்றினார்.
ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது
இந்நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பயணிகளுடன் கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் 2 எஞ்சின்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டது. இதனையடுத்து எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானி கண்டுபிடித்தார். இதுதொடர்பாக தொழில்நுட்ப கோளாறு குறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு குறித்த நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்
நள்ளிரவு 12.45 மணிக்கு கொல்கத்தாவிற்கு வந்த விமானத்தை காலை வரை இயக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. சுமார் 5 மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகு விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து விமானங்களில் கோளாறு ஏற்படுவதும், வெடி குண்டு மிரட்டல், விபத்தில் சிக்குவதும், போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருவதால் விமானப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.