- Home
- இந்தியா
- தமிழக எம்.பி.க்களை அந்தரத்தில் அலறவிட்ட ஏர்இந்தியா - இயந்திரக் கோளாறால் கதறி துடித்த பயணிகள்
தமிழக எம்.பி.க்களை அந்தரத்தில் அலறவிட்ட ஏர்இந்தியா - இயந்திரக் கோளாறால் கதறி துடித்த பயணிகள்
திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர்இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் 5 எம்.பி.கள் உள்பட 181 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

ஏர்இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் AI 2455, நானும், பல எம்.பி.க்களும், நூற்றுக்கணக்கான பயணிகளும் இன்று பயங்கரமான துயரத்தை எதிர்கொண்டோம்.
பதற்றத்தில் பயணிகள்
தாமதமாக புறப்பட்டதாகத் தொடங்கிய பயணம், ஒரு துயரமான பயணமாக மாறியது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, நாங்கள் முன்னெப்போதும் இல்லாத பதற்றத்தில் சிக்கினோம். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, கேப்டன் விமானத்தில் சிக்னல் கோளாறு இருப்பதாக அறிவித்து சென்னைக்குத் திருப்பி விடப்பட்டார்.
2 மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், தரையிறங்க அனுமதிக்காக காத்திருந்தோம், விமானியின் முதல் முயற்சியின் போது எங்கள் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ஓடுபாதையில் - மற்றொரு விமானம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நொடியில், கேப்டன் விரைவாக மேலே செல்ல முடிவு செய்ததால் விமானத்தில் இருந்த ஒவ்வொரு உயிரும் காப்பாற்றப்பட்டது. இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பயணிகள் காப்பாற்றப்பட்டது எப்படி?
திறமை மற்றும் அதிர்ஷ்டத்தால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். பயணிகளின் பாதுகாப்பு அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க முடியாது. இந்த சம்பவத்தை அவசரமாக விசாரித்து, பொறுப்புணர்வை சரிசெய்யவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியோரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட இந்த ஏர்இந்தியா விமானத்தில் MPகளான கே.சி.வேணுகோபால், கொடிகுணில் சுரேஷ், அணில் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன், ராபர்ட் புரூஸ் என 5 எம்.பி.கள் உடன் 181 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் உடனடியாக சென்னையில் தரையிரக்கப்பட்ட நிலையில், 2 மணி நேரம் கழித்து மாற்று விமானத்தில் அனைவரும் டெல்லி புறப்பட்டனர்.
பாதுகாப்புக்கே முன்னுரிமை - Air India
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள விளக்கத்தில், “அன்புள்ள திரு. வேணுகோபால், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். சென்னை விமான நிலையத்தில் முதல் தரையிறங்கும் முயற்சியின் போது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததால் அல்ல, சென்னை விமான போக்குவரத்து ஆணையத்தால் ஒரு சுற்றுப்பாதை அமைக்க அறிவுறுத்தப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள எங்கள் விமானிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள், மேலும் இந்த விஷயத்தில், அவர்கள் விமானம் முழுவதும் நிலையான நடைமுறைகளைப் பின்பற்றினர். இதுபோன்ற அனுபவம் தொந்தரவாக இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் திருப்பி விடப்பட்டதால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இருப்பினும், பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமை. உங்கள் புரிதலுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.