- Home
- இந்தியா
- ஆற்றில் குளிக்க சென்ற நண்பர்கள்.! அடுத்தடுத்து தண்ணீரில் மாயமான 8 இளைஞர்கள்- நடந்தது என்ன.?
ஆற்றில் குளிக்க சென்ற நண்பர்கள்.! அடுத்தடுத்து தண்ணீரில் மாயமான 8 இளைஞர்கள்- நடந்தது என்ன.?
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எட்டு இளைஞர்கள், கோதாவரி நதியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கினர். 11 பேர் குளிக்கச் சென்ற நிலையில், 8 பேர் நீரில் மூழ்கிய நிலையில் 3 பேர் உயிர் தப்பினர்.

திருமண நிகழ்விற்கு வந்த இளைஞர்கள்
ஆந்திரப் பிரதேசத்தில் நிகழ்ந்த சோகச் சம்பவம் ஒன்றில், கோதாவரி நதியில் நீச்சலடிக்கச் சென்ற எட்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர்கள், பின்னர் கோதாவரி நதியில் குளிக்கச் சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது. மொத்தம் 11 பேர் நதியில் இறங்கிய நிலையில், மூன்று பேர் மட்டும் உயிர் தப்பினர்.
கோதாவரி ஆற்றில் குளித்த இளைஞர்கள்
கோனசீமா மாவட்டம், கே. கங்கவரம் மண்டலம், ஷெருலங்கா கிராமத்தைச் சேர்ந்த பொலிசெட்டி அபிஷேக் என்பவரது வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள, காக்கிநாடா, ராமச்சந்திரபுரம், மண்டபேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து நண்பர்கள் வந்திருந்தனர். மதிய உணவுக்குப் பின், கமினிலங்கா அருகே உள்ள கோதாவரி நதிக்கரைக்குச் சென்ற இளைஞர்கள் குளிக்க முடிவு செய்தனர்.
அடுத்தடுத்து மாயமான 8 இளைஞர்கள்
அப்போது நதியின் நீரோட்டம் அதிகமாக இருந்துள்ளது. ஆனால் இதனை அறியாமல், இருவர் முதலில் நதியில் இறங்கி குளிக்க தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த இரண்டு பேரையும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றவர்களும் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களும் அடுத்தடுத்து நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 11 பேர் நீரில் இறங்கிய நிலையில், மூன்று பேர் மட்டும் உயிர் தப்பினர். 8 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயினர்.
நீரில் மூழ்கிய இளைஞர்களை தேடும் பணி தீவிரம்
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிர் தப்பியவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர்,
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். காணாமல் போனவர்களில் சப்பிதா க்ராந்தி கிரண் (19), சப்பிதா பால் அபிஷேக் (18), வட்டி மகேஷ் (15), வட்டி ராஜேஷ் (15) ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன், தாடிபூடி நிதீஷ் (18), ஏலுமார்த்தி சாய் (18), ரோஹித் (18), எலிபே மகேஷ் (14) ஆகியோரும் காணாமல் போயினர்.