MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • 150 vs 151: மகனை ஜெயிக்க வைத்துவிட்டு மறைந்த தாய்... நெஞ்சை உருக்கும் தேர்தல் களம்!

150 vs 151: மகனை ஜெயிக்க வைத்துவிட்டு மறைந்த தாய்... நெஞ்சை உருக்கும் தேர்தல் களம்!

அரசியல் களத்தில் 1 ஓட்டுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்பதைப் பல தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன. ஆனால், ராஜஸ்தானில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவில் வெளிவந்துள்ள சம்பவம், ஒட்டுமொத்த நாட்டையுமே கண்கலங்க வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

1 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 16 2026, 08:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விசித்திர முடிவுகளால் அதிர்ந்த ராஜஸ்தான்!
Image Credit : x

விசித்திர முடிவுகளால் அதிர்ந்த ராஜஸ்தான்!

ராஜஸ்தான் மாநிலத்தில் செப்.9, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கடந்த திங்கள்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டபோது, வெளிவந்த முடிவுகள் ஒவ்வொன்றும் அரசியல் கட்சிகளுக்குப் பெருத்த அதிர்ச்சியைத் தந்தன.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க சார்பில் களமிறங்கிய வேட்பாளர்கள் வெவ்வேறு வார்டுகளில் தலா ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்று அதிர்ச்சி தந்தனர். இன்னொரு வார்டில் போட்டியிட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு பூஜ்ஜியம் (0) வாக்குகள் விழுந்து, அவரே தலையில் அடித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
150 vs 151: ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்ற சுயேச்சை!
Image Credit : x

150 vs 151: ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்ற சுயேச்சை!

இந்த விசித்திரமான முடிவுகளுக்கு நடுவே, பரத்பூர் மாவட்டம் நத்பாய் நகராட்சியின் 6-வது வார்டு தேர்தல் முடிவுதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவ்வார்டில் சுயேச்சையாக் போட்டியிட்ட ஜெகதிஷ் பிரசாத், தன்னை எதிர்த்து நின்ற பாஜக வேட்பாளர் ராம்ஷரனை விடக் கூடுதலாக ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று திரில் வெற்றி பெற்றார். பா.ஜ.க வேட்பாளர் ராம்ஷரன் 150 வாக்குகளைப் பெற, ஜெகதிஷ் பிரசாத் 151 வாக்குகள் பெற்று வெற்றிக்கொடி நாட்டினார்.

34
வெற்றியைப் பார்க்காமல் பிரிந்த தாயின் உயிர்!
Image Credit : x

வெற்றியைப் பார்க்காமல் பிரிந்த தாயின் உயிர்!

ஆனால், இந்த வரலாற்று வெற்றியை ஜெகதிஷ் பிரசாத்தால் பட்டாசு வெடித்துக் கொண்டாட முடியவில்லை. காரணம், அவரது தாய் வாக்களித்த அடுத்த நாளே, அதாவது தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார். ஒருவேளை அவரது தாய் வாக்களிக்காமல் போயிருந்தாலோ அல்லது வாக்களிப்பதற்கு முன்பே உயிர் பிரிந்திருந்தாலோ, ஜெகதிஷ் பிரசாத்தின் வெற்றி சமநிலையாகிப் பறிபோயிருக்கக் கூடும்.

44
கண்ணீரில் நனைந்த வெற்றிச் சான்றிதழ்!
Image Credit : xrajasthan 151 votes

கண்ணீரில் நனைந்த வெற்றிச் சான்றிதழ்!

ஒட்டுமொத்த வார்டின் தலைவிதியையும், தன் மகனின் வெற்றியையும் மாற்றியமைத்தது உயிரிழந்த தாய் போட்ட அந்த ஒற்றை இறுதி வாக்குதான் என்பது தெரிந்ததும் குடும்பத்தினரும் ஊர் மக்களும் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்துள்ளனர்.

ஒருபுறம் பெற்ற தாயை இழந்த தாங்க முடியாத வலி, மறுபுறம் அவர் ஆசீர்வதித்துச் சென்ற ஒற்றை வாக்கில் கிடைத்த வெற்றி என, தாயின் மரண சோகத்திற்கு நடுவே ஜெகதிஷ் பிரசாத்துக்கு் கிடைத்த இந்த வெற்றி சான்றிதழ், நத்பாய் பகுதி மக்களைப் பெருத்த சோகத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

About the Author

M
Meenakshisundaram
இந்தியா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
'உனக்காக நான் இருக்கேன்'... நண்பனுக்காக இறங்கிவந்த மோடி; ஒரே நிமிடத்தில் நடந்த தலைகீழ் மாற்றம்!
Recommended image2
Tirumala Electric Buses : திருப்பதியில் 32 இலவச எலக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம்!
Recommended image3
8th Pay Commission: வருஷத்துக்கு 4 முறை DA உயர்வா? 25% தாண்டுனா Basic Pay-ல சேருமா?
Related Stories
Recommended image1
வைரலாகும் அம்பானி மருமகளின் நடனம்! ஏன் தெரியுமா?
Recommended image2
'உனக்காக நான் இருக்கேன்'... நண்பனுக்காக இறங்கிவந்த மோடி; ஒரே நிமிடத்தில் நடந்த தலைகீழ் மாற்றம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved