திருப்பதி போய் திரும்பி வந்தா ரூ.30 கிடைக்கும்; வாங்க மறக்காதீங்க!!
திருப்பதி திருமலையில் தண்ணீர் பாட்டிலை வாங்கி திரும்ப ஒப்படைக்கும் பக்தர்களுக்கு ரூ.30 வழங்கப்படுகிறது. அங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் தண்ணீர் பாட்டில்களை முழுமையாக கொண்டு வர திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
Tirupati elumalaiyan temple
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 2 அல்லது 3 நாள் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஏழுமலையான் கோயில் மலைகள்சூழ வனத்தை சுற்றி அமைந்துள்ளதால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் திருப்பதி மற்றும் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கவோ, பயன்படுத்தவோ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கடைகள் முழுவதுமாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததுடன், பக்தர்களும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
Plastic ban in tirupati
திருமலை மற்றும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்கள நடை பாதையில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதிலாக கண்ணாடி டம்ளர்கள், காகித கப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதால் திருமலையில் உள்ள கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது திருமலையில் கடைகளில் 750 மில்லி கண்ணாடி தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை வசூல் செய்யப்படுகிறது. பக்தர்கள் இந்த கண்ணாடி தண்ணீர் பாட்டிலை வாங்கி வெறும் பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் அவர்களுக்கு கடைக்காரர்கள் 30 ரூபாயை திருப்பிக் கொடுக்கின்றனர். இதேபோல் திருமலை கடைகளில் 500 மில்லி பேக்கேஜ் செய்யப்பட்ட கண்ணாடி வாட்டர் பாட்டிலுக்கு ரூ.40 வசூல் செய்யப்படுகிறது.
ராஜ வசதிகள்.. ஆசியாவின் மிகவும் விலை உயர்ந்த சொகுசு ரயில்! டிக்கெட் விலை இவ்வளவா?
Class water bottle use in tirupati
பக்தர்கள் அதனை பயன்படுத்தி பாட்டிலை திரும்ப கொண்டு வந்து கொடுத்தால் ரூ.25 திருப்பி கொடுக்கப்படுகிறது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு பக்தர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக, இந்த திட்டத்தில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதாவது சில கடைகளில் கண்ணாடி பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், மேலும் பாட்டிலை திருப்பி கொடுக்கும்போது சரியான தொகையை கொடுப்பதில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஒரு சில கடைகளில் கடைக்காரர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே மோதல் உண்டானது. இதனால் தேவஸ்தானம் கண்ணாடி பாட்டில்களுக்கான வைப்புத்தொகையாக மேற்கண்ட கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது.
Tirupati temple
இதேபோல் திருமலை முழுவதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் தண்ணீர் பாட்டில்களை முழுமையாக கொண்டு வர திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த தண்ணீர் பாட்டில்கள் விலை குறைவாகம், தண்ணீர் தரம் நிறைந்ததாகவும் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி கடைகளில் தண்ணீர் பாட்டிலை வாங்கி திரும்ப ஒப்படைக்கும் பக்தர்களுக்கு ரூ.30 வழங்கப்படுகிறது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு பக்தர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆதார் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி? ஆன்லைன் அப்டேட் பண்ணலாம்!