- Home
- உடல்நலம்
- Knee Pain : முழங்கால் வலிக்கு உடனடி நிவாரணம்!!தேங்காய் எண்ணெய் கூட இதை கலந்து தடவி பாருங்க!!
Knee Pain : முழங்கால் வலிக்கு உடனடி நிவாரணம்!!தேங்காய் எண்ணெய் கூட இதை கலந்து தடவி பாருங்க!!
ஒரு நொடியில் முழங்கால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்க தேங்காய் எண்ணெயில் இந்த பொருட்களில் ஒன்றை கலந்து தடவி பாருங்கள்.

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்க
முழங்கால் வலி என்பது தற்போது அனைவருக்கும் வரும் ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. இது நம்முடைய மொத்த செயல்பாட்டையும் குறைத்து விடும். முழங்கால் வலி வந்தால் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்ய முடியாது மற்றும் நீண்ட நேரம் நடக்கவும் முடியாது. வயது மூப்பு, எலும்பு தேய்மானம், உடல் பருமன் உள்ளிட்ட பல காரணங்களால் மூட்டு வலி ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில், தேங்காய் எண்ணெயில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பொருட்களில் ஏதேனும் ஒன்றை கலந்து அதை முழங்காலில் தடவி மசாஜ் செய்தால் முழங்கால் வலி குறையும். அந்த பொருட்களில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை மூட்டு வலியை குறைக்க உதவுகின்றன. அவை என்னென்ன பொருட்கள் என்று இப்போது எங்கு பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் அஸ்வகந்தா பொடி :
தேங்காய் எண்ணெயில் சிறிதளவு அஸ்வகந்தா பொடியை கலந்து அதை முழங்காலில் தடவி வந்தால் முழங்கால் வலி குறையும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை கலந்து முழங்காலில் தடவி மசாஜ் செய்தால் முழங்கால் வலி குறையும். ஏனெனில் யூகலிப்டஸ் எண்ணெயில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை வலியை குறைக்க உதவும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் குங்குமப்பூ ;
தேங்காய் எண்ணெயில் சிறிதளவு குங்குமம் பூவை கலந்து அதை முழங்காலில் தடவி மசாஜ் செய்து வந்தால் வலி கட்டுக்குள் இருக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் வெந்தயம் :
தேங்காய் எண்ணெயில் வெந்தய விதைகளை சேர்ந்து சிறிது நேரம் ஊறி விட்டு பிறகு அந்த எண்ணெயை முழங்காலில் தடவி மசாஜ் செய்தால் வலி பறந்து போகும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு எள் எண்ணெயை கலந்து அதை முழங்காலில் தடவி மசாஜ் செய்து வந்தால் வலி கட்டுப்படுத்தப்படும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கொத்தமல்லி விதைகள் :
தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை சேர்த்து காய்ச்சி பிறகு வடிகட்டி அதை முழங்காலில் தடவி மசாஜ் செய்தால் வலி கட்டுக்குள் இருக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் :
தேங்காய் எண்ணெயுடன் பச்சை கற்பூரத்தை கலந்து அதை முழங்காலில் தடவி மசாஜ் செய்தால் வலி குறையும்.