சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள டாப் 10 மாநிலங்களின் லிஸ்ட்.. தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?
நீரிழிவு நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 மாநிலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
diabetes
The Lancet Diabetes and Endocrinology இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயாள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நமது மக்கள்தொகையில் 11.4% ஆகும்.
diabetes
இதன் மூலம் அதிக நீரிழிவு நோயாளிகளை கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. நீரிழிவு நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 மாநிலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
diabetes
கோவா : நீரிழிவு நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. கோவாவில் 26.4% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி :நமது அண்டை மாநிலமான புதுச்சேரி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. புதுச்சேரியில் 26.3% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
diabetes diet
கேரளா : இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இருப்பது நமது மற்றொரு அண்டை மாநிலம் கேரளா. அங்கு 25.5% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டிகர் : 20.4% பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதால் இந்த பட்டியலில் சண்டிகர் 4-வது இடத்தில் உள்ளது.
diabetes foods
டெல்லி : இந்த பட்டியலலில் தலைநகர் டெல்லி 5-வது இடத்தில் உள்ளது. அங்கு 17.8% பேருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது.
diabetes diet
தமிழ்நாடு : இந்தியாவில் அதிக சர்க்கரை நோயளிகள் கொண்ட பட்டியலில் தமிழ்நாடு 6-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 14.4% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கம் : இந்த பட்டியலில் 7-வது இடத்தில் இருப்பது மேற்கு வங்கம். இங்கு 13.7% பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது.
சிக்கிம் : சிக்கிம் இந்த பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. சிக்கிமில் 12.8% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
diabetes
பஞ்சாப் : இந்த பட்டியலில் பஞ்சாப் 9-வது இடத்தில் உள்ளது. பஞ்சாபில் 12.7% பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது.
ஹரியானா : இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது ஹரியானா. ஹரியானாவில் 12.4% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.