எத்தனை நாட்களுக்கு ஒருமுறை டூத் பிரஷ் மாற்ற வேண்டும் தெரியுமா? டாக்டர்கள் எச்சரிக்கை
நீங்க இன்னும் பழைய டூத் பிரஷ்ஷையே பயன்படுத்திக்கிட்டிருக்கீங்களா? அப்படின்னா இது உங்களுக்கான முக்கிய தகவல்! தினமும் பயன்படுத்தும் பிரஷ்ஷில் தெரியாத அளவுக்கு பாக்டீரியாக்கள் தேங்கிக் கொண்டே இருக்கும்.

டூத் பிரஷ் மாற்றுதல்
பல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினசரி பழக்கங்களில் மிகவும் முக்கியமானது டூத் பிரஷ் பயன்படுத்துவது தான். ஆனால் பலர் ஒரே டூத் பிரஷ்ஷை நீண்ட காலம் பயன்படுத்தி வருவது வழக்கம். உண்மையில், ஒரு டூத் பிரஷ்ஷை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவது தான் நிபுணர்கள் பரிந்துரைக்கும் சரியான நடைமுறை. சரியான பிரஷ்ஷை தேர்வு செய்வதோடு, அதை நேரத்திற்கு மாற்றுவது கூட சமமாக முக்கியம்
பல் ஆரோக்கியம்
நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷில் கண்களுக்கு தெரியாத அளவுக்கு பல பாக்டீரியாக்கள் தேங்கிக் கொண்டே இருக்கும். குறிப்பாக, பிரஷ்ஷை குளியலறையில் திறந்த இடத்தில் வைத்தால், ஈரப்பதம் காரணமாக கிருமிகள் வேகமாக பெருகும். இந்த சூழலில் நீண்ட நாட்கள் அதே பிரஷ்ஷை பயன்படுத்தினால், பல் தொற்றுகள் மற்றும் வாய்நோய்களுக்கு வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், காலப்போக்கில் பிரஷ்ஷின் முட்கள் வளைந்து அதன் திறன் குறையும்.
வாய்சுத்தம் டிப்ஸ்
பழைய அல்லது சேதமடைந்த பிரஷ்ஷை பயன்படுத்தினால் பற்களில் இருக்கும் அழுக்கு மற்றும் பிளாக் முழுமையாக நீங்காது. இதனால் பற்கள் மஞ்சளாக மாறுதல், ஈறு பிரச்சனைகள் போன்றவை. குறிப்பாக முட்கள் வளைந்து இருந்தாலோ அல்லது கடினமாக மாறியிருந்தாலோ, அது ஈறுகளை காயப்படுத்தி வலியை ஏற்படுத்தும். அதனால், பிரஷ்ஷின் நிலையை கவனித்து தேவையான நேரத்தில் மாற்றுவது நல்லது.
டூத் பிரஷ் கிருமி
மேலும், பல் சிகிச்சைகள் செய்த பிறகும் புதிய டூத் பிரஷ் பயன்படுத்துவது அவசியம். ரூட் கனல், ஈறு சிகிச்சை அல்லது வேறு டென்டல் ட்ரீட்மென்ட் முடிந்ததும் பழைய பிரஷ்ஷை தவிர்க்க வேண்டும். மேலும், சளி, காய்ச்சல் அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு புதிய பிரஷ்ஷை பயன்படுத்துவது பாதுகாப்பானது. இப்படி சிறிய கவனிப்புகள் மூலம் நமது பல் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பாதுகாக்கலாம்.

