MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Paste Veg or Non Veg: பேஸ்ட் சைவமா? அசைவமா? பலரும் நம்பும் 'கலர் கோடு' ரகசியம் இதுதான்!

Paste Veg or Non Veg: பேஸ்ட் சைவமா? அசைவமா? பலரும் நம்பும் 'கலர் கோடு' ரகசியம் இதுதான்!

Paste Veg or Non Veg: பேஸ்ட் டியூப்பின் கீழ் இருக்கும் பச்சை, சிவப்பு, நீலம், கருப்பு நிறக் குறியீடுகள் எதை குறிக்கின்றன? பேஸ்ட் சைவமா, அசைவமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? முழு விளக்கத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 27 2026, 05:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பேஸ்ட் சைவமா? அசைவமா?
Image Credit : Pinterest

பேஸ்ட் சைவமா? அசைவமா?

காலையில் எழுந்தவுடன் நாம் முதலில் கையில் எடுப்பது பல் துலக்கும் பிரஷ். அதில் பயன்படுத்தும் பேஸ்ட் உண்மையில் சைவமா? அசைவமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதேபோல், பேஸ்ட் டியூப்பின் கீழே கீழே இருக்கும் பச்சை, சிவப்பு, நீலம், கருப்பு நிறக் கோடு அல்லது சதுரம் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்?

பச்சை நிறம் இருந்தால் இயற்கையான பேஸ்ட், சிவப்பு இருந்தால் கெமிக்கல் கலந்த பேஸ்ட், கருப்பு இருந்தால் முழுவதும் கெமிக்கல் என்று சமூக வலைதளங்களில் பல ஆண்டுகளாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதில் உண்மை என்ன தெரியுமா? இந்த நிறக் குறியீடுகளுக்கும் பேஸ்ட்டின் மூலப்பொருட்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பச்சை, சிவப்பு நிறக் குறியீடு எதற்காக?
Image Credit : Pinterest

பச்சை, சிவப்பு நிறக் குறியீடு எதற்காக?

பேஸ்ட் டியூப்பின் கீழே பச்சை, சிவப்பு, நீலம், கருப்பு என வெவ்வேறு நிறங்களில் இருக்கும் அந்தச் சிறிய கோடு அல்லது கட்டத்தைப் பார்த்ததும் ரகசிய குறியீடா? என்று நினைக்க வேண்டாம். இந்தச் சிறிய குறியீடு ‘Eye Mark’ என அழைக்கப்படுகிறது.

பேஸ்ட் டியூப் தயாரிக்கப்படும் போது, டியூப்பை சரியான இடத்தில் வெட்டவும், மடிக்கவும், எங்கு சீல் செய்ய வேண்டும் என்பதை இயந்திரத்தில் உள்ள சென்சார்கள் கண்டறிய இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

அதனால், பச்சை என்றால் இயற்கை, சிவப்பு என்றால் ரசாயனம், நீலம் என்றால் மருந்து, கருப்பு என்றால் முழுவதும் ரசாயனம் என்று அந்த நிறங்களை வைத்து பேஸ்ட்டின் தன்மையை தீர்மானிக்க முடியாது.

அடுத்த முறை பேஸ்ட் டியூப்பின் கீழே அந்தச் சிறிய நிறக் கட்டத்தைப் பார்த்தால், அது பேஸ்ட்டின் ரகசியத்தைச் சொல்லும் குறியீடு அல்ல, உற்பத்தி இயந்திரத்துக்கு வழிகாட்டும் ஒரு சிறிய அடையாளம் என நினைக்கவும்.

35
பேஸ்ட் சைவமா, அசைவமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
Image Credit : Pinterest

பேஸ்ட் சைவமா, அசைவமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

பேஸ்ட் சைவமா, அசைவமா என்பதை டியூப்பின் கீழே இருக்கும் பச்சை, சிவப்பு, நீலம், கருப்பு நிறக் குறியீட்டை வைத்து தெரிந்துகொள்ள முடியாது. அதற்கு பதிலாக, பேக்கேஜில் குறிப்பிடப்பட்டுள்ள சைவம் அல்லது அசைவம் (Vegetarian / Non-Vegetarian) தொடர்பான குறியீடு மற்றும் தயாரிப்பு விவரங்களைப் பார்க்க வேண்டும்.

2026 செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியிடப்பட்ட Legal Metrology (Packaged Commodities) Fourth Amendment Rules கீழ், சோப்பு, ஷாம்பு, பற்பசை உள்ளிட்ட குறிப்பிட்ட அழகுசாதனப் பொருட்கள் (cosmetics) மற்றும் கழிவறைப் பொருட்களின் (toiletries) பேக்கேஜில், அவை சைவம் ( vegetarian origin) அல்லது அசைவம் ( non-vegetarian origin) என்பதைத் தெரிவிக்கும் குறியீடு இடம்பெற வேண்டும்.

45
பேஸ்ட் சைவமா? அசைவமா?
Image Credit : Pinterest

பேஸ்ட் சைவமா? அசைவமா?

பச்சை நிறப் புள்ளி இருந்தால் அது சைவ மூலப்பொருட்களைக் (vegetarian origin) கொண்டது. அதேபோல், சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளி இருந்தால் அதில் அசைவ மூலப்பொருட்களின் (Non-Vegetarian Origin) பயன்பாடு இருப்பதைக் குறிக்கும். இந்தக் குறியீடு பேக்கேஜின் முன்புறப் பகுதியில் இடம்பெற வேண்டும் என்று புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

55
பேஸ்ட்டில் ஏன் சைவம்? அசைவம்?
Image Credit : Pinterest

பேஸ்ட்டில் ஏன் சைவம்? அசைவம்?

பேஸ்ட்டில் கிளிசரின் அல்லது கிளிசரால் (glycerin/glycerol) போன்ற பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பேஸ்ட்டின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும், அதன் texture-ஐ சரியாக வைத்திருக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

கிளிசரின் தாவர எண்ணெய்களிலிருந்தும், செயற்கை முறையிலும், சில சந்தர்ப்பங்களில் விலங்கு கொழுப்பிலிருந்தும் தயாரிக்கப்படலாம். எனவே, ஒரு குறிப்பிட்ட மூலப்பொருளின் பெயரை மட்டும் வைத்து பேஸ்ட் சைவமா, அசைவமா என்று முடிவு செய்ய முடியாது. அந்தப் பொருளின் origin மற்றும் உற்பத்தியாளர் வழங்கும் தகவலையே பார்க்க வேண்டும்.

அதனால் இனிமேல் பேஸ்ட் வாங்கும்போது, கீழே என்ன கலர்? என்று பார்க்காமல், பேக்கெட்டில் என்ன குறியீடு இருக்கிறது? என்று பாருங்கள்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆரோக்கிய குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bun Dosa : இட்லி, தோசை போரடிக்குதா? இப்படி பன் தோசை செஞ்சு பாருங்க; சாஃப்ட்டா, ஸ்பாஞ்ச் மாதிரி இருக்கும்!
Recommended image2
Nungu Payasam: அடிக்கும் வெயிலுக்கு செம கூல் ட்ரீட்! நுங்கு பாயாசம் செய்வது எப்படி?
Recommended image3
Soft Paneer: பனீர் கல்லு மாதிரி ஆகுதா..? சமையலில் நீங்க செய்யும் இந்த ஒரு தவறுதான் காரணம்..!
Related Stories
Recommended image1
Tooth Paste Benefits: பல் துலக்க மட்டுமல்ல.. உங்க டூத் பேஸ்ட் வச்சி வீட்டையே பளிச்சுனு மாத்தலாம்.!
Recommended image2
Toothpaste : பல் துலக்குறப்ப டூத்பேஸ்ட் ரொம்ப எடுக்குறீங்களா? பலர் செய்ற தவறே இதுதான்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved