- Home
- உடல்நலம்
- Things to Check on Bottled Water: நீங்கள் குடிக்கும் பாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதா? லேபிளில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Things to Check on Bottled Water: நீங்கள் குடிக்கும் பாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதா? லேபிளில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Things to Check on Bottled Water: பாட்டில் தண்ணீர் வாங்கும்போது அதில் என்னவெல்லாம் சரிபார்த்து வாங்க வேண்டும் தெரியுமா? இதை எல்லாம் தெரிஞ்சிக்காம பாட்டில் தண்ணீர் வாங்காதீங்க.

பாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதா?
பயணங்களின் போதும், அவசரத் தேவைகளுக்கும் நாம் இன்று அதிகம் நம்பியிருப்பது பாட்டில் குடிநீரைத்தான். வெளியில் செல்லும்போது எளிதில் கிடைப்பதால், அதன் தரம் குறித்த முழுமையான பரிசோதனை இன்றி பலரும் வாங்கிப் பருகுகின்றனர். ஆனால், ஒரு பாட்டில் தண்ணீர் உண்மையிலேயே பாதுகாப்பானதா என்பதைத் தீர்மானிப்பதில் அதன் லேபிள் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பாட்டில் தண்ணீர் வாங்கும்போது லேபிளில் கவனிக்க வேண்டியவை
தண்ணீரின் வகை: அது சாதாரண சுத்திகரிக்கப்பட்ட குடிநீரா அல்லது இயற்கை மினரல் தண்ணீரா என்பதை லேபிளில் உறுதி செய்யவும்.
தரச் சான்றிதழ்: தர நிர்ணய அமைப்புகளின் அங்கீகார எண்கள் மற்றும் சின்னங்கள் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதைப் பாருங்கள்.
உற்பத்தி மற்றும் காலாவதி தேதி: தண்ணீர் எத்தனை நாட்களுக்கு முன் அடைக்கப்பட்டது மற்றும் எப்போது வரை பயன்படுத்தலாம் என்ற தேதியைக் கட்டாயம் சரிபார்க்கவும். அதிக வெயிலில் அல்லது நீண்ட காலம் தேங்கிக் கிடக்கும் பாட்டில்களைத் தவிர்ப்பது நல்லது.
மூடி சீல்: பாட்டிலின் மூடி ஏற்கனவே திறக்கப்படாமல், சரியாக சீல் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். சீல் உடைந்திருந்தால் அல்லது லேசாகத் திறந்திருந்தால் அதை வாங்க வேண்டாம்.
சேமிப்பு வழிமுறைகள்: பாட்டிலை நேரடி சூரிய ஒளியில் வைக்கக் கூடாது, குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும் போன்ற குறிப்புகள் லேபிளில் இருக்கும்; அவற்றைப் பின்பற்றுவது தண்ணீரின் தரத்தைப் பாதுகாக்கும்.
பாட்டில் மூடியின் நிறமும் அதன் அர்த்தமும்
நீலம் - சாதாரண குடிநீர்
வெள்ளை - சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்
பச்சை- மினரல் தண்ணீர்
கருப்பு - பிரீமியம் / ஆல்கலைன் தண்ணீர்
மஞ்சள் - வைட்டமின் சேர்க்கப்பட்ட / மேம்படுத்தப்பட்ட தண்ணீர்
சிவப்பு - சுவையூட்டப்பட்ட / கார்பனேற்றப்பட்ட தண்ணீர்
மக்களுக்கான விழிப்புணர்வு
பாட்டில் தண்ணீர் வசதியானதுதான் என்றாலும், அதைக் குடிக்கும் முன் ஒரு நிமிடம் லேபிளையும் சீலையும் கவனிப்பது நம் ஆரோக்கியத்தைக் காக்கும். மேலும் வெளியில் செல்லும்போது தவிர்க்க முடியாமல் வாங்கும் பாட்டீல் தண்ணீரை நன்று உற்று பாரக்கவும். அதில் பச்சை நிறம், சிறிய துகள்கள் ஏதாவது இருப்பின் அதை வாங்க வேண்டாம். தண்ணீர் சந்தேகத்திற்கிடமான பாட்டில்களையோ, காலாவதியான தண்ணீரையோ தவிர்த்து, பாதுகாப்பான குடிநீரைப் பழக்கமாக்கிக் கொள்வோம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர்/ உடல்நலப் பயிற்சியாளரை அணுகவும்.















