உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க... வெறும் 5 ரூபாய் பொருள் போதும்! கட்டாயம் இதை 1 முறை ட்ரை பண்ணுங்க
கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சில உணவுகளை அன்றாடம் எடுத்து கொள்ள வேண்டும். அவை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
tamil health updates summer foods: கொளுத்தும் வெயிலுடன் கோடை காலம் தொடங்கிவிட்டது. இந்த சீசனில் ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், கொளுத்தும் வெயிலின் அனல் காற்று உங்களை பாடாய்படுத்திவிடும். உடலில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்.
உடல் எப்போதும் குளிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். பொதுவாக, கோடை காலத்தில் நீரிழப்பு ஆபத்து, சரும நோய்கள் அதிகமாக இருக்கும். அதனால் வெயில் காலத்தில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவை எடுத்து கொள்ள வேண்டும். அவை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஆரஞ்சு
கோடை காலத்தில் ஆரஞ்சு பழங்களை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் ஆரஞ்சு பழத்தில் ஏராளமான நீர்ச்சத்து உள்ளது, இது நம் உடலை நீரிழப்புக்கு எதிராக போராட உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம் ஆகியவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
கீரைகள், பச்சை காய்கறிகள் (Green leafy vegetables)
பச்சை காய்கறிகள், கீரைகளை உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வெப்பத்திலிருந்து நிவாரணம் வழங்குவதில் பச்சை காய்கறிகளும், கீரைகளும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் தினமும் ஏதேனும் ஒரு கீரை ஜூஸ் அல்லது கூட்டு சாப்பிடுங்கள். நீரேற்றம் அளிக்கும் பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணி போன்றவை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
மோர் (buttermilk)
கோடை காலத்தில் தயிர், கருப்பு உப்பு கலந்து தயாரிக்கப்படும் மோர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. மோர் தயாரிக்கும்போது அதில் புதினா இலைகள் போட்டு அருந்தலாம் இன்னும் குளிர்ச்சியை அளிக்கும். குறிப்பாக கோடை காலத்தில் மோர் குடித்தால், எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள் செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தாது. தப்பித்து கொள்ளலாம்.
நுங்கு (nungu or ice apple)
நுங்கு சுளைகள் வெறும் 5 ரூபாய் முதல் விற்பனையாகிறது. இதனை வாங்கி உண்பதால் உடல் நீரேற்றமாக இருக்கும். சரும நோய்கள் அண்டாது. செரிமான பிரச்சனைகள் கூட குணமாகும். கோடையில் தினமும் நுங்கு சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.
எலுமிச்சை (lemon)
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நம் உடலை வெப்பத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், உடலை உட்புறமாக புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் எலுமிச்சை சாறு உதவுகிறது. கோடை காலத்தில், தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை தண்ணீரை தவறாமல் குடித்தால் நலமாக இருக்கலாம்.
இளநீர் (coconut water)
கோடை காலத்தில், பெரும்பாலான மக்கள் வெப்பத்தால் துவண்டு போய்விடுவார்கள். அந்த நேரங்களில் குளிர்பானங்களை எடுத்து கொள்ளாமல், அதற்கு பதிலாக, இளநீர் குடிக்கவும். இதை குடிப்பதன் மூலம், உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். நீரிழப்பு பிரச்சனை இருக்காது. தேய்காப்பூவும் உண்ணலாம்.