சர்க்கரை நோயை ஒழிக்கும் அற்புத செடி!! சிறுகுறிஞ்சான் இலை பத்தி தெரியுமா?
சர்க்கரையை விரட்டும் தாவரமான சிறுகுறிஞ்சான் பற்றியும் அதன் நன்மைகள் குறித்தும் இங்கு காணலாம்.

சர்க்கரை நோய்
நீங்கள் சாப்பிட்ட பின்னர் இனிப்பான உணவை தேடுபவரா? உங்களால் இனிப்புச் சுவை உள்ள உணவை சாப்பிடாமல் இருக்க முடியாதா? இது மாதிரி நிறைய பேருக்கு எண்ணங்கள் வருகின்றன. இது இயல்புதான். ஆனால் அதிக அளவில் இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதிலும் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. இதைக்
கட்டுப்படுத்த சர்க்கரை கொல்லி என அழைக்கப்படுகிற சிறுகுறிஞ்சான் தாவரம் உதவுகிறது. இனிப்பு சாப்பிட வேண்டும் என தூண்டப்படும் உணர்வுகளை கட்டுப்படுத்த இந்த செடியின் இலைகள் உதவுவதாக கூறப்படுகிறது இது குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.
சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்:
சிறுகுறிஞ்சான் இலைகள் பல ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. இது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற தூண்டலை குறைத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்த இலைகள் உங்களுக்கு இனிப்பு உணவுகளை உண்பதால் ஏற்படும் நிறைவான உணர்வை நீக்க உதவுகிறது. உதாரணமாக இனிப்பு சுவையின் தித்திப்பு உங்களை மேலும் மேலும் உண்ணத் தூண்டும். இந்த தாவரத்தின் இலைகளை உண்பதால் அதை தடுக்கலாம். சிறுகுறிஞ்சான் இலைகளில் உள்ள சில அமிலங்கள் நாக்கில் காணப்படும் இனிப்பு சுவையை உணரும் ஏற்பிகளை தற்காலிகமாக தடுக்கின்றன.
எப்படி சாப்பிட வேண்டும்?
நீங்கள் இனிப்பு உணவுகளை உண்பதற்கு முன்பாக சிறுகுறிஞ்சான் இலைகளை சாப்பிட வேண்டும். இந்த இலைகளை நேரடியாக சாப்பிட முடியாவிட்டால் இலைகளின் சாறை எடுத்து குடிப்பதால் எந்த வகையான இனிப்பு சுவையும் நாவில் தெரியாது. இந்த இலைகள் நீங்கள் உண்ணும் சர்க்கரை கலந்த உணவுகளின் இனிப்பு சுவையை குறைப்பதால் மேலும் மேலும் அதனை உண்ண வேண்டும் என்ற ஆர்வம் இருக்காது. நீங்கள் அதிகமாக சர்க்கரை உணவுகள் சாப்பிடுபவராக இருந்தால் இந்த இலைகள் அதனை குறைக்க உதவுகிறது.
சர்க்கரை நோயை ஒழிக்கும் சிறுகுறிஞ்சான்!
இந்த இலைகள் அளவுக்கதிகமான பசியை கட்டுப்படுத்துகிறது. பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகப்படியான பசி எடுக்கும். அதனைத் தடுக்க இந்த இலைகளை உண்ணலாம். இதில் உள்ள சேர்மங்கள் உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. குடலில் சர்க்கரை உறிஞ்சிகளை குறைக்கும் சக்தி கொண்டது. வகை 2 நீரிழிவு நோயால் அவதிபடுபவர்கள் இதனை எடுத்து கொள்ளலாம். ஆனால் இந்த இலைகள் மட்டுமே சர்க்கரை நோயை குறைக்காது. அளவான ஆரோக்கியமான உணவு, தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது ஏதேனும் மிதமான உடற்பயிற்சிகள் போன்றவை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சிறுகுறிஞ்சான் செடிகளை கண்டுபிடிப்பது பெரிய டாஸ்க். நகரத்தில் உள்ளவர்களுக்கு இதை காண்பதே அரிதுதான். இப்போது இந்த தாவரத்தின் பொடிகள் நாட்டு மருந்து கடைகள் அல்லது ஆன்லைனில் கிடைக்கின்றன.