இந்த 4 வழிகளை பின்பற்றினால் போதும்.. பற்கள் முத்து போல ஜொலிக்கும்..!!
பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் அதை மீண்டும் வெள்ளையாக்குவது கடினம். உண்மையில், சில குறிப்புகளை பின்பற்றினால் பற்கள் வெண்மையாகவும், முத்து போலவும் இருக்கும்.
ஒருவர் தனது மேனியை முறையாக பராமரித்தால், அவருடைய வெளித்தோற்றம் பொலிவு பெறும். ஆனால் அவருடைய உள்ளமும் அழகுடன் தான் திகழ்கிறது என்பதை மற்றவர்கள் உணருவதற்கு புன்னகை வழிவகை செய்கிறது. உண்மையில், பற்கள் வெண்மையாக இருந்தால் மட்டுமே, இதயத்திலிருந்து சிரிக்க முடியும். ஆனால் மஞ்சள் நிற பற்களை கொண்டவர்களுக்கு புன்னகைப்பது சற்று தர்மசங்கடமாகி விடுகிறது. அப்படிப்பட்ட சூழலில் மஞ்சள் நிற பற்களை கொண்டவர்கள் தங்கள் கைகளால் வாயை மூடிக் கொண்டு புன்னகை செய்கின்றனர். யாராவது பற்களை பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்பதே இதற்கு காரணம்.
சரியாக துலக்காமல் இருந்தாலும் பற்கள் மஞ்சள் நிறத்தில் தெரியும். இதுமட்டுமில்லாமல் பல்வேறு பராமரிப்பு குறைபாடு காரணமாகவும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பற்கள் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும். இருப்பினும், சில வீட்டு வைத்தியங்கள் மூலம் மஞ்சள் பற்களை சரிபார்க்கலாம். அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்கான காரணங்கள்
புகைபிடித்தல், தவறான உணவுமுறை, மோசமான வாய்வழி சுகாதாரம், மரபணு காரணிகள் ஆகியவற்றால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. இதுதவிர உடல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போனாலும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
வேம்பப்பூ சாறு
தினமும் பல் துலக்குவதற்கு பதிலாக வேப்பம்பூ சாற்றில் பல் சுத்தம் செய்வது நல்லது. இது உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை நீக்கும். இதன்மூலம் உங்களுடைய பற்கள் வெண்மையாக மின்னும். காலையில் எழுந்ததும் தினமும் இந்த சாற்றை கொப்பளித்து துப்புவதும் பற்களுக்கு நன்மையை சேர்க்கும்.
வாழைப்பழ தோல்
வாழைப்பழத்தோல் முகத்தை அழகுபடுத்துவது மட்டுமின்றி பற்களை சுத்தம் செய்யவும் உதவுகிறது. இதற்கு முதலில் வாழைப்பழத்தை உரித்து, தோலின் உள்பகுதியை பற்களில் தேய்க்கவும். அதன் பிறகு, வெதுவெதுப்பான நீரில் பற்களைக் கழுவுவது நல்லது. இப்படி அடிக்கடி செய்து வந்தால் பற்களின் நிறம் மாறுகிறது. பற்கள் வெண்மையாக பளபளக்கும்.
ஸ்ட்ராபெர்ரி
மஞ்சள் பற்களை வெண்மையாக்க ஸ்ட்ராபெர்ரிகளும் பல்வேறு வகையில் வழிவகை செய்கின்றன. வெறும் ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிடுவதால் மட்டும் பற்களில் இருக்கும் மஞ்சள் கரைகள் போய்விடாது. தினமும் ஒரு ஸ்ட்ராபெர்ரி பழத்தை எடுத்து பற்களில் தேய்க்க வேண்டும். அதையடுத்து வாயில் மிதமான சூடு இருக்கும் தண்ணீரை கொப்பளித்து துப்பலாம்.
எலுமிச்சை தோல்கள்
எலுமிச்சையில் ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் இருப்பதால், எலுமிச்சை தோல்கள் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவதில் பெரியளவில் பயன் தருகின்றன. இவை உங்கள் பற்களில் மஞ்சள்-பச்சை நிறத்தை விரைவாக நீக்கிவிடும். எலுமிச்சை தோல்களை எடுத்து பற்களில் தேய்ப்பது மட்டுமில்லாமல், எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து வாயில் ஊற்றி கொப்பளிப்பதும் பற்களில் இருக்கும் மஞ்சள் கரைகளை சுத்தம் செய்துவிடும்.