- Home
- உடல்நலம்
- Rajasthani soft chapati : பஞ்சு போல ராஜஸ்தான் ஸ்டைல் சப்பாத்தி..மாவு பிசையும் ரகசியம் இதுதான்!
Rajasthani soft chapati : பஞ்சு போல ராஜஸ்தான் ஸ்டைல் சப்பாத்தி..மாவு பிசையும் ரகசியம் இதுதான்!
Rajasthani soft chapati: பஞ்சு போல மென்மையான ராஜஸ்தான் ஸ்டைல் சப்பாத்தி வீட்டிலேயே செய்வது எப்படி? மாவை பிசைக்கும் முறை, தண்ணீர் அல்லது பால் சேர்ப்பது, எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தும் ரகசியம் என்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
15

Image Credit : Pinterest
ராஜஸ்தான் ஸ்டைல் சாஃப்ட் சப்பாத்தி
சப்பாத்தி மென்மையாகவும், சாப்பிடும்போது உடைந்து போகாமல் பஞ்சு போல இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் வீட்டில் மாவு பிசைந்து சப்பாத்தி செய்தால் சில நேரங்களில் அது கடினமாகிவிடும். இனி அந்த கவலை வேண்டாம்.
ராஜஸ்தான் ஸ்டைலில் மாவை சரியான முறையில் பிசைந்து, சப்பாத்தி செய்தால் மென்மையான பதத்தைப் பெறலாம். குறிப்பாக மாவு பிசைக்கும்போது பயன்படுத்தும் தண்ணீரின் வெப்பநிலையும், மாவை ஊறவைக்கும் நேரமும் சப்பாத்தியின் மென்மையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
Image Credit : Pinterest
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
சூடான அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் - தேவையான அளவு
பால் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சப்பாத்தி சுடுவதற்கு சிறிது நெய் - தேவையான அளவு
35
Image Credit : Pinterest
மாவை எப்படி பிசைய வேண்டும்?
- முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் சிறிதளவு உப்பு சேர்க்கவும். அதில் ஒரே நேரத்தில் தண்ணீரை ஊற்றாமல், கொஞ்சம் கொஞ்சமாக வெதுவெதுப்பான தண்ணீரைச் சேர்த்து மாவை பிசையத் தொடங்குங்கள்.
- இன்னும் மென்மையான சப்பாத்தி வேண்டும் என்றால், தண்ணீருடன் சிறிதளவு பால் சேர்க்கலாம்.
- மாவு ஒன்றாகச் சேர்ந்ததும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள்.
- மாவு மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது. மென்மையாகவும், கையில் அதிகமாக ஒட்டாத பதத்திலும் இருக்க வேண்டும்.
45
Image Credit : Pinterest
உண்மையான ரகசியம்
மாவை ஓய்வெடுக்க விடுவது
- மாவை பிசைத்தவுடன் உடனே சப்பாத்தி தேய்க்காமல், அதன் மீது சிறிது எண்ணெய் தடவி மூடி 15 - 20 நிமிடங்கள் ஓய்வெடுக்க விடுங்கள். இதனால் மாவு நன்றாக செட் ஆகி, சப்பாத்தி மென்மையாக வர உதவும்.
- அதன் பிறகு மாவை சம அளவிலான உருண்டைகளாகப் பிரித்து, சிறிது உலர் மாவு தூவி மெல்லியதாக தேய்க்கவும். தேய்த்த சப்பாத்தியை நான்காக மடித்து, மீண்டும் மெதுவாக தேய்க்கவும்.
- இப்படி மடித்து மீண்டும் தேய்ப்பதால் மாவுக்குள் லேயர் உருவாகி, சப்பாத்தி சுடும்போது புசுபுசுவென மென்மையாகவும் அடுக்குகளுடனும் வரும்.
55
Image Credit : Pinterest
சாஃப்ட் சப்பாத்தி ரெடி
- தவாவை நன்றாக சூடாக்கி, தேய்த்த சப்பாத்தியைப் போடவும். ஒரு பக்கம் சிறிய குமிழ்கள் தோன்றியதும் சப்பாத்தியைத் திருப்பிப் போடுங்கள்.
- மறுபுறமும் வெந்ததும் மீண்டும் திருப்பி, லேசாக அழுத்தவும். இதனால் சப்பாத்தி நன்றாக உப்பி, புசுபுசுவென வரும்.
- அடுப்பிலிருந்து எடுத்தவுடன் சிறிதளவு நெய் தடவி, மூடியுள்ள பாத்திரத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதால் சப்பாத்தி நீண்ட நேரம் மென்மையாக இருக்கும்.
சாஃப்ட் சப்பாத்திக்கு கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்
- மாவுக்கு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்
- வெதுவெதுப்பான தண்ணீர் பயன்படுத்தலாம்
- விருப்பப்பட்டால் சிறிதளவு பால் சேர்க்கலாம்
- மாவில் சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும்
- மாவை குறைந்தது 15 - 20 நிமிடங்கள் ஓய்வெடுக்க விடவும்.
Latest Videos

