Hip Pain : அடிக்கடி இடுப்பு வலியா? இதை ஒருமுறை செய்ங்க! அப்புறம் வலியே இருக்காது
அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Hip Pain Reasons
இடுப்பு வலி என்பது நம் அனைவருக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையையாகும். இடுப்பு வலி வந்தால் சரியாக எழுந்து நிற்கவோ அல்லது உட்காரவோ மிகவும் சிரமமாக இருக்கும். இந்த காலத்துல பெரியவர்கள் மட்டுமல்ல இளைஞர்கள் கூட இடுப்பு வழியால் அவதிப்படுகிறார்கள். இடுப்பு வலி வந்தாலே பொதுவாக மாத்திரை அல்லது தைலத்தை பயன்படுத்தி வலியை குறைத்து விடுவோம். சரி இப்போது இந்த பதிவில் இடுப்பு வலி வருவது ஏன்? இடுப்பு வலியில் இருந்து விடுபட என்ன செய்யனும் என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இடுப்பு வலி வருவதற்கான காரணங்கள் :
- அதிகப்படியான வேலையில் ஈடுபட்டால் மூட்டுகளின் குறுத்தெலும்பு பாதிப்படையும். இதனால் இடுப்பு வலி ஏற்படும்.
- வயது மூப்பின் காரணமாகவும் இடுப்பு வலி ஏற்படும்.
- சிலர் எழும்போதும், உட்காரும்போதும் இடுப்பு பிடித்துக் கொண்டு இருப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் இடுப்பை சுற்றியுள்ள அமைப்புகளில் வலி இருப்பதே ஆகும்.
- நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தாலோ அல்லது நடந்தாலோ கூட இடுப்பு வலி ஏற்படுகிறது.
- காலில் இருக்கும் பெரிய எலும்பு இடுப்பு மூட்டுடன் சரியாக இணையாமல் இருந்தால் இடுப்பு வலி ஏற்படும்.
- நீண்ட நேரம் உட்கார்ந்து அதிக வேலை செய்யும்போது இடுப்பில் அதிக அழுத்தம் உண்டாகிறது. இதனால் இடுப்பு வலி ஏற்படும். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களால் சரியாக உட்காரவோ, எழவோ ரொம்பவே சிரமமாக இருக்கும்.
இடுப்பு வலியை குறைக்க வழிகள் :
- இடுப்பு வலி வரக்கூடாது என்று நினைத்தால் தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்யுங்கள். உதாரணமாக வாக்கிங், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
- வயிறு மற்றும் முதுகுப்புற தசைகளை வலுவாக வைத்தால் இடுப்பு வலி வராமல் இருக்கும்.
- முதுகை பின்புறமாக வளைத்து உடற்பயிற்சி செய்தால் இடுப்பு வலி வராமல் தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் உடல் எடையை சரியான அளவில் வைத்தாலும் இடுப்பு வலி ஏற்படாது.
வீட்டு வைத்தியம் :
- வலியுள்ள இடத்தில் குளிர்ந்த அல்லது சூடான நீர் கொண்டு ஒத்தடம் கொடுத்து வந்தால் வீக்கம் குறையும், தசைகளை தளர்த்தும்.
- சூடான நீரில் குளித்தால் தசைகளை தளர்த்த உதவும்.
- கால்களை உயர்ந்து நிலையில் வைத்து ஓய்வெடுத்தால் இடுப்புக்கு ரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும் இதனால் வலி குறையும்.
- மென்மையான நீட்சி அல்லது லேசான உடற்பயிற்சி செய்தால் தசைகள் தளர்த்தும், வலியைப் போக்கும்.
மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும் :
- வலி மிகவும் தீவிரமாக இருந்தால் உடனே மருத்துவர் அணுகவும்.
- இடுப்பு வலி சில சமயங்களில் தீவிர உடல்நிலை பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
- வீட்டு வைத்தியங்கள் பின்பற்றியும் பலனளிக்கவில்லை என்றால் உடனே மருத்துவரை சந்தித்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.